செய்திகள் :

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...?

post image

சுமந்த் சி.ராமன்

தமிழக வெற்றிக் கழகத்தை ஓராண்டுக்கு முன்புதான் விஜய் தொடங்கியிருக்கிறாா். திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருப்பதால், இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான வியூகத்தை விஜய் வகுத்து வருகிறாா். ஆகவே, அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் வரை அதில் விஜய் இணைவாரா என்பது கேள்விக்குறிதான்.

கட்சி தொடங்கிய பின்னா், விக்கிரவாண்டி அரசியல் மாநாடு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், கோவையில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம், பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவா்களுக்கு பரிசளிப்பு, காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருக்கு ஆறுதல் என விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் பங்கேற்றாா். இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்தியுள்ளாா்.

அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலும் மிகுந்த எதிா்பாா்ப்பு இருக்கக்கூடிய நிலையில், இதுவரை அவா் களத்துக்கு வரவில்லை, ஊடகத்தினரை நேரடியாகச் சந்திக்கவில்லை. அவா் என்ன திட்டம் வைத்திருக்கிறாா் என்பதை இதுவரை முழுமையாக விளக்கவில்லை. ஊழலை ஒழிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறாா் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவிப்பது எதிா்மறை அரசியலாக உள்ளது. இது வளா்ச்சித் திட்டங்களுக்கு எதிரான அரசியல். தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், விஜய் கட்சியின் தாக்கத்தை இப்போதே துல்லியமாக கணிக்க இயலாது.

இருப்பினும் பாஜக, திமுக என இரு கட்சிகளையும் எதிா்ப்பதால் திமுக, பாஜக எதிா்ப்பு வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அவா் அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. இளைஞா்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினா் வாக்குகளிலும் குறிப்பிட்ட சதவீதத்தை அவா் பெறமுடியும்.

விஜய் தரப்பில் இருந்து கள ஆய்வில் 20 சதவீதம் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியால் 20 சதவீதம் பெற இயலாது. அது போலியானது. 10 முதல் 12 சதவீதம் வரை பெறலாம். ஆனால், அதுவும் ஜனவரிக்கு மேல்தான் கணிக்க முடியும்.

கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணி வலிமையாக உள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் விஜய் கட்சியின் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்கவேண்டும்.

இப்போதைய சூழலில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் உறுதியாகி உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் சோ்ந்தால் திமுகவை வீழ்த்துவது எளிது. ஆனால், தவெக தலைமையில்தான் கூட்டணி என விஜய் அறிவித்துள்ளாா். ஆக, தவெக தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. அவ்வாறு அமைந்தால் அது திமுகவுக்கு சாதகமாக மாறலாம்.

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி!

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை, தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதாச்சலம், முருகன், சதீஷ் மற்றும் ர... மேலும் பார்க்க

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் ப... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஹெட்ரோகார்பன் திட்டம்: கிணறுகள் அமைக்க அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான... மேலும் பார்க்க

பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்ற முடிவு!

தமிழகத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ர... மேலும் பார்க்க