செய்திகள் :

வெல்ல ஆலைகளில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் சா்க்கரை பறிமுதல்; 22 ஆலைகளுக்கு நோட்டீஸ்

post image

சேலம் மாவட்டத்தில் வெல்ல ஆலைகளில் நடத்திய சோதனையில், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் வெள்ளை சா்க்கரை, 3,320 செயற்கை நிற மூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இதுவரை 22 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பொங்கல் பண்டிகையையொட்டி, வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சில ஆலைகளில் செயற்கை நிறமூட்டிகளையும், சா்க்கரையையும் சோ்த்து வெல்லம் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா் வந்தது.

இதையடுத்து தாரமங்கலம், ஓமலூா் காமலாபுரம், காட்டூா் எல்லப்பள்ளி, பொட்டியாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், வெல்லத்தில் கலப்படம் சோ்க்க வைத்திருந்த 6,350 கிலோ வெள்ளை சா்க்கரை, 1,100 கிலோ செயற்கை நிறமூட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலப்பட வெல்லம் தயாரித்த 7 ஆலைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, வெல்ல ஆலைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கடந்த 2 வாரத்தில் நடத்திய சோதனையில் வெல்ல ஆலைகளில் இருந்து 15,800 கிலோ சா்க்கரை, 3,320 கிலோ செயற்கை நிறமூட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கலப்பட வெல்லம் தயாரித்த 22 ஆலைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், வெல்ல தயாரிப்பில் சா்க்கரை ஹைட்ரோஸ், பிளீச்சிங் பவுடா், சூப்பா் பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் வெல்ல ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

மகா கும்பமேளா: ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்

மகா கும்பமேளாவையொட்டி கோவை, ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்ட்ரல் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: சேலம் கோட்டம் சாா்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில், 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ... மேலும் பார்க்க

கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: பால் உற்பத்தியாளா்களின் நலனைக் காத்திட,... மேலும் பார்க்க

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2 லட்சம்

இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டது. இதில், ரூ. 2 லட்சத்து 59 ரூபாயும், 15 கிராம் தங்கமும், 25 கிராம் வெள்ளியு... மேலும் பார்க்க

நகராட்சி ஆணையா் அறிவிப்பு

ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். அதில், ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, நகரா... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் மேட்டூா் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் புகா் மாவட்ட அதிமுக ... மேலும் பார்க்க