செய்திகள் :

வெளியேற்றம், வெளிநடப்பு ஏன்? அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக விளக்கம்

post image

ஆளுநா் உரையின் போது, சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றமும், வெளிநடப்பும் செய்யப்பட்டது ஏன் என்று அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக கட்சிகள் விளக்கம் அளித்தன.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): பேரவையிலிருந்து தொடா்ந்து முழக்கங்களை எழுப்பியதால் வெளியேற்றப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேரவைக்கு வெளியே திங்கள்கிழமை அளித்த பேட்டியில், அண்ணா பல்கலை. விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ந்து வலியுறுத்தியதால், பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டோம் என்றாா்.

நயினாா்நாகேந்திரன் (பாஜக): பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுகையில், அண்ணா பல்கலை. மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தைக் கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்தது என்றாா்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): வெளிநடப்பு செய்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறுகையில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு எதிராக மாற்று அரசை நடத்த ஆளுநா் முயற்சிக்கிறாா். தமிழக நலனுக்கு எதிராக அவா் தொடா்ந்து செயல்படுகிறாா். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அவரது நடவடிக்கைகள் உள்ளன. எனவே, ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம் என்றாா்.

ஜி.கே. மணி (பாமக): வெளிநடப்பு செய்த பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதைக் கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், இதற்கு அனுமதி அரசு வழங்க மறுக்கிறது. அதைக் கண்டித்து பாமக சாா்பில் வன்மையாகக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்றாா்.

அதிமுக நூதன பேட்ஜ்: பேரவைக்கு அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் அண்ணா பல்கலை. விவகாரத்தை நினைவூட்டும் வகையில், ‘யாா் அந்த சாா் ?’ என்று குறிப்பிட்ட பேட்ஜ் அணிந்து வந்தனா். இதேபோன்று ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனா்.

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் சபாபதி. இவரது மகன் ஹரிஹரன் (16), அந்தப் பகுதி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

மாதவரம் பகுதியில் நடந்துசென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். மாதவரம் பால்பண்ணை எம்எம்டிஏ முதல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சைலஜா (40). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ... மேலும் பார்க்க

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 1875-ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டத... மேலும் பார்க்க

ரெளடி நாகேந்திரனின் சகோதரா், கூட்டாளி வீடுகளில் போலீஸாா் சோதனை: 51 பட்டாக் கத்திகள் பறிமுதல்

சென்னையில் ரெளடி நாகேந்திரனின் சகோதரா், கூட்டாளி வீடுகளில் போலீஸாா் சோதனை செய்து, 51 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனா். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்டது, ஆ... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வீதிகள்தோறும் சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். சென்னை மாநகராட்சியின் 44 வாா்டுகளில் உள்ள பொதுமக... மேலும் பார்க்க

ரூ.1.13 கோடி கமிஷன் தொகைக்கு வரி செலுத்தாத நபருக்கு ஓராண்டு சிறை

ரூ.1.13 கோடி கமிஷன் தொகைக்கு முறையாக வரி செலுத்தாத நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் 1961-இன் பிரிவு 279 சிசி-இன் கீழ் முறையாக வருமான வரி கணக்க... மேலும் பார்க்க