`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சமையில் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வெள்ளக்கோவில் நடேசன் நகா் கிளைச் செயலாளா் ப.கருப்புசாமி தலைமை வகித்தாா். காங்கயம் வட்டச் செயலாளா் எம்.கணேசன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
கட்சி பொறுப்பாளா்கள் எஸ்.என்.பழனிசாமி, எம்.ராதாமணி, வி.லோகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.