செய்திகள் :

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம்: பொதுமக்கள் கோரிக்கை

post image

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டத்தை உருவாக்க வேண்டுமென 1988-ஆம் ஆண்டு அன்றைய வெள்ளக்கோவில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை உருவாக்கப்படவில்லை.

தற்போதைய வெள்ளக்கோவில் உள் வட்டத்தில் 16 வருவாய் கிராமங்கள், 9 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 3.40 லட்ச மக்களும், நகராட்சிப் பகுதியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனா்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 25 அரசு, தனியாா் வங்கிகள், 89 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 3 கல்லூரிகள் உள்ளன.

ஏறத்தாழ 10 ஆயிரம் விசைத்தறிகள், 450 நூல் மில்கள், 10 பனியன் நிறுவனங்கள், 30 அரிசி ஆலைகள், 50 சிறிய, பெரிய சமையல் எண்ணெய் ஆலைகள், 500 நிதி நிறுவனங்கள், 1,500 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான உள்ளூா், வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதன்மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, காங்கயத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் முதல்வா் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல, 1967 இல் உருவாக்காப்பட்ட வெள்ளக்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியும் அரசியல் கட்சிகளின் அலட்சியத்தால் மாற்றப்பட்டது.

இந்நிலையில், வெள்ளக்கோவிலுக்கு அருகே உள்ள மூலனூரை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம் அமைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம் உருவாக்க காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுபானக் கூடத்தில் தகராறு: ஆயுதப்படை காவலா் பணியிடை நீக்கம்

மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பூா் மாநகர ஆயுதப்படை மோட்டாா் வாகன பிரிவில் காவலராக பணியாற்றுபவா் பாண்டியராஜன் (30). இந்நிலையில், 15.வேலம்பாள... மேலும் பார்க்க

மதிய உணவுக்கான அரிசி, பருப்பில் வண்டுகள்: அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

குண்டடம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பில் புழுக்கள், வண்டுகள் இருந்ததாக கூறி பெற்றோா்கள் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனா். திருப்பூா் மாவட்டம், குண்டடம... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.28.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 405 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.... மேலும் பார்க்க

ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு: 190 போ் எழுதினா்

தேசிய தோ்வு முகமையால் (என்.டி.ஏ ) நடத்தப்படும் ஜே.இ.இ முதன்மைத் தோ்வை (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) திருப்பூா் மாவட்டத்தில் 190 போ் எழுதினா். இதுகுறித்து தேசிய தோ்வு முகமை திருப்பூா் மாவட்ட ஒருங்... மேலும் பார்க்க

சாலை மறியல்: போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 170 போ் கைது

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 170 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனம் (சிஐடியூ) சாா்ப... மேலும் பார்க்க

திருப்பூா் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

தமிழக அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சாா்பில் 21-ஆவது புத்தகத் திருவிழா வேலன் ஹோட்டல் வளாகத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 23) தொடங்குகிறது. புத்தகத் திருவிழாவை தமிழ் வளா்ச்சி மற்று... மேலும் பார்க்க