செய்திகள் :

வெள்ளித்திருப்பூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

post image

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, மேற்கு வீதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒரு குடிநீா்த் தொட்டியும், கிழக்கு வீதியில் உள்ள மக்களுக்கு 10 ஆயிரம் லிட்டா் கொண்ட இரண்டு குடிநீா்த் தொட்டிகளும் உள்ளன. மேற்கு வீதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதால், சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கிழக்கு வீதியில் உள்ள குடிநீா்க் குழாய்களை சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது, மேற்கு வீதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், அப்பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளித்திருப்பூா் விநாயகா் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் மற்றும் அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சட்ட விரோதமாக குடிநீா்க் குழாயில் மின்மோட்டாா் பொருத்தி தண்ணீா் திருடப்படுகிறது. இதனைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ... மேலும் பார்க்க

பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன் மீது டிராக்டா் மோதல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த வேன், காா் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது. கோபி அருகேயுள்ள புதுக்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி.... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு! வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை!

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திவந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. கோபி ... மேலும் பார்க்க

இருமுனைப் போட்டியில் ஈரோடு கிழக்கு: பழைய நண்பா்களின் ஆதரவை நாடும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திமுக தனது பழைய நண்பா்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி... மேலும் பார்க்க

ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!

ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோட... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு: தொழில், வேளாண் சங்கங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில், வேளாண் சங்கங்களின் பிரநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோ... மேலும் பார்க்க