செய்திகள் :

வேங்கைவயல்: போராட்டம் நடத்த முயன்ற விசிக-வினர் கைது; போலீஸ் குவிப்பு; களநிலவரம் என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேங்கைவயல்
வேங்கைவயல்

இந்த சம்பவம் நடைபெற்று மூன்றாண்டுகள் தொடங்கியும் இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதற்கிடையில், 4-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ பரிசோதனை எனப் பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, பலரிடம் குரல் மாதிரி சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மூன்று பேர்கள் ஈடுபட்டதாகப் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க அண்ணாமலை, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர், ‘இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், வேங்கைவயல் கிராமத்திலும், புதுக்கோட்டையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட, பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

மற்றொருபுறம், ‘பாதிக்கப்பட்ட எங்களில் மூன்று பேரைக் குற்றவாளியாக்குவதா?’ என்று வேங்கைவயலைச் சேர்ந்த மக்கள் ஊரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். ஊருக்கு முகப்பிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான போலீஸார், பேரிகாட் அமைத்து செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

இந்தச் சூழலில், வேங்கைவயலில் மக்கள் உள்ளிருப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி திரும்பி வரும் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், மேற்கு மாவட்டச் செயலாளர் வெள்ளைநெஞ்சன், புதுக்கோட்டை நகரச் செயலாளர் அண்ணாதுரை, ஆலங்குடி தொகுதிச் செயலாளர் விஜயபாஸ்கர், குன்றாண்டார்கோவில் ஒன்றிய அமைப்பாளர் நந்தன், கணேசமூர்த்தி ஆகியோரை வேங்கைவயலுக்கும் பூங்குடிக்கும் அருகில் உள்ள பகுதியில் வைத்து கைது செய்தது காவல்துறை.

தடுத்து நிறுத்தப்பட்ட செய்தியாளர்கள்
தடுத்து நிறுத்தப்பட்ட செய்தியாளர்கள்

அதேபோல் வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற சிறுத்தை சிவா உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். இன்னொருபக்கம், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற 35க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட மூவர் கைது; சிக்கியது எப்படி?

வடசென்னையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "தன்னுடைய 12 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்... மேலும் பார்க்க

வேங்கை வயல்: ``சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது'' -மூவர் தரப்பில் மனுத்தாக்கல்!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

`டாக்டர், அரசு அதிகாரி..!’ - ஆசை வலை வீசி பல ஆண்களுடன் திருமணம்; சமூகவலைதள பதிவால் சிக்கிய பெண்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன் (27). இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருக்கிறார். சிவசந்திரனுக்கும், நிஷாந்தி என்பவருக்கும் கடந்த வாரம் முறைப்படி ... மேலும் பார்க்க

``வேலை இழந்து, திருமணம் ரத்தாகி..." -சைஃப் அலிகான் தாக்குதலில் சந்தேகத்தில் கைதானவர் வேதனை..

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த மாதம் அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு சைஃப் அலிகானை தாக்கிய நப... மேலும் பார்க்க

மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த முதியவர்

மும்பையில் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களை போலீஸ், சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து கோடிக்கணக்கில் மர்ம கும்பல் பணம் பறித்து வருகிறது. இக்கும்பல் பங்... மேலும் பார்க்க

விருதுநகர் : அண்ணனை வெட்டி கொன்ற தம்பி - கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு

விருதுநகர் மாவட்டத்தில், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பியை ராஜபாளையத்தில் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க