`வேண்டியது நிறைவேற வேலூரில் விளக்குப் பூஜை' அகிலாண்டேஸ்வரி அருளால் அனைத்தும் வெற்றியே வாருங்கள்!
2025 ஜனவரி 31-ம் தேதி வேலூர் கோட்டை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்குபூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
அகிலத்துக்கும் முதன்மை சக்தியாகவும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாகவும் விளங்குபவள் அகிலாண்டேஸ்வரி. இவளே வேலூரின் மையத்தில் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்து வருகிறாள். இவளை வணங்கினால் வேண்டியது கிடைக்கும். வேதனைகள் தணியும் என்பார்கள். இவளைத் தேடி வந்து சரண் அடைந்தால் துக்கம் என்பதே இல்லை என்பதே உண்மை.
வசிஷ்ட்டர், அகத்தியர், கௌதமர், பரத்வாசர், வால்மீகி, காசியபர், என்ற ஆறு ரிஷிகள் வழிபட்ட இடங்களே ஷடாரண்ய க்ஷேத்ரம் எனும் ஆறு காடுகள் என்றாகி அது தற்போது ஆற்காடு என்ற ஊராகியுள்ளது. சப்த ரிஷிகளில் எழாமவரான அத்திரி முனிவர் வணங்கிய ஈசனே ஜலகண்டேஸ்வரர் என்று தற்போது வேலூர் கோட்டையில் வணங்கப்படுகிறார் என்று தலவரலாறு கூறுகிறது. பிறகு சோழர்கள் காலத்தில் பொம்மிரெட்டி, திம்மிரெட்டி என்பவர்களால் இந்த அழகு மிகுந்த ஆலயம் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.
தென்னிந்திய கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலுக்கு முகப்பாக ஏழு நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது.ஆலயத்தின் உள்ளே வலதுபுறத்தில் திருக்குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. இந்த கல்யாண மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் உலகப் புகழ் கொண்டவை. அழகின் அத்தனை அம்சமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியில் ஆச்சர்யம் அளிப்பவை. முதல் கடவுளாக முழு முதல் நாயகனாக இங்கு வலம்புரி விநாயகர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
உட்பிராகாரத்தில் 63 நாயன்மார்கள், சப்தகன்னியர், வீரபத்திரர், விநாயகர் எனத் தொடங்கி நடராஜர், வழித்துணைநாதர், மரகதவல்லி, சோமாஸ்கந்தர், கங்கா பாலாறு ஈஸ்வரன், கால பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரர், நந்திதேவர், விநாயகர், வெங்கடேச பெருமாள், சுப்பிரமணியர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, பிரம்மா என பல சந்நிதிகள் இங்குண்டு.
ஆலய மூலவர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் என்றும் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்று போற்றப்படுகிறாள். மாங்கல்ய வாழ்வும் மங்கல வரமும் அருளும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியை வணங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
ஐந்து தலை நாகம் ஒன்று தோன்றி ரெட்டி சகோதரர்களுக்கு புதையல் இருந்த இடத்தையும் அத்திரி முனிவர் வணங்கிய லிங்கத்தையும் காண்பித்தது. பொம்மி ரெட்டியும், திம்மி ரெட்டியும் அந்த புதையலை எடுத்து ஒன்பது ஆண்டுகளில் இந்த பிரமாண்ட கொட்டையையும் இக்கோயிலையும் கட்டி முடித்தனர் எனப்படுகிறது. ஐந்து தலைநாகமாகத் தோன்றி அருள்பாலித்தவள் அகிலாண்டேஸ்வரி.
பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் பெண்கள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். 'கடன்கள் தீரும்' 'திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; அம்பிகையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.
உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.
கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07