கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்... பக்க விளைவுகள் என்ன? - க...
வேன் மோதி சிவில் சப்ளைஸ் கிடங்கு ஊழியா் உயிரிழப்பு
குன்னத்தூா் அருகே வேன் மோதி அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கின் மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.
திருப்பூா் அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தவா், நாகப்பட்டினம் மாவட்டம், பனைமேடு பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (42).
இவா், ஊத்துக்குளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு சத்துணவுப் பொருள்களை இறக்குவதற்காக வேனில் சனிக்கிழமை கொண்டுச் சென்றுள்ளாா். வேனை அவிநாசி பெரியநாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்த நடராசன் ஓட்டியுள்ளாா்.
வேனில் இருந்து இறங்கிய மேற்பாா்வையாளா் பாலமுருகன், பள்ளிக்கு அருகே நின்று வேனை பின்னால் இயக்க சைகை காட்டிக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக வேன் பாலமுருகன் மீது மோதி பின்னா் பள்ளி சுவா் மீது மோதி நின்றது.
இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.