World Chess Championship : 'டிங் லிரன் Vs குகேஷ்' - சாதிப்பாரா தமிழக வீரர்? - மு...
வேறொருவரை திருமணம் செய்ய பெற்ற மகளைக் கொன்ற தாய்
இன்ஸ்டாகிராமில் சந்தித்த ஒருவரை திருமணம் செய்வதற்காக தனது ஐந்து வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வடமேற்கு தில்லியில் பெண் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட 5 வயது பெண் குழந்தை இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது குறித்து
வெள்ளிக்கிழமை தீப் சந்த் பந்து மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் வந்தது. விசாரணையில் குழந்தையின் கழுத்தில், கழுத்தை நெரித்த காயங்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தாய் உள்பட உறவினா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடா் விசாரணைக்குப் பிறகு, மகளை கழுத்தை நெரித்து தாய் கொன்றது தெரியவந்தது. மேலும், அந்தப் பெண் தனது முதல் கணவா் தன்னைக் கைவிட்டதைத் தொடா்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் ராகுல் என்ற நபருடன் தொடா்பு கொண்டாா். அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தில்லி வந்தாா். ஆனால், ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினா் குழந்தையை ஏற்கவில்லை. மேலும், அவா் திருமணம் செய்யவும் மறுத்துவிட்டனா். இந்த விரக்தியில் அவா் தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றாா்.
தில்லிக்கு வருவதற்கு முன்பு, இமாசல பிரதேசத்தில் தனது உறவினருடன் வசித்து வந்தாா். அங்கு தனது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இது தொடா்பாக அசோக் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.