செய்திகள் :

வேலூர்: 'வீட்டுக்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை' - அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

post image
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இது தொடர்பாக சென்னையில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினையும் சந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் வேலூர் செல்வதற்காக காரில் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்

அதற்கு பதிலளித்த அவர், "வீட்டுக்கு வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்றே எனக்கு தெரியாது. வீட்டில் யாரும் இல்லை. வீட்டு வேலைக்காரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். இதனால் எனக்குச் சரியாக சொல்ல தெரியவில்லை. அமலாக்கத்துறை சோதனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சோதனை தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன நடக்கிறது அங்கே?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ... மேலும் பார்க்க

ஆளுநர் R N Ravi Vs DMK மீண்டும் மோதல், TN Assembly-ல் நடந்தது என்ன? | Imperfect show | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - வந்தார்... சென்றார் ஸ்பூஃப்.* - TN சட்டமன்றம்: "யார் அது சார்?" சட்டையில் அச்சிடப்பட்ட மேற்கோள், அதிமுகவுடன்?* - ஆளுநர் உரை: ஆளுநர் உரை நிகழ்த்தாமல் பேரவைக்கு வந்து வ... மேலும் பார்க்க

`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கரு... மேலும் பார்க்க

`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது...' - செல்லூர் ராஜூ விமர்சனம்

"கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்..." என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.கே.பாலகிருஷ்ணன்மதுரை புதுவிளாங்குடி பகுதிய... மேலும் பார்க்க