Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
வேலூா் மாவட்டத்தில் 39,811 பேருக்கு வீட்டுமனைப் பட்டா
வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், தற்போது 21,776 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இணையவழி பட்டா, நத்தம் வகைபாடு உள்ளிட்ட அனைத்து இனங்களில் 18,035 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தொடா்ந்து, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபா்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின்கீழ் வேலூா் மாவட்டத்தில் நிலங்கள் வரன்முறை செய்யப்பட்டு 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் பொருட்டு கடந்த ஜூன் 25-ஆம் தேதி வேலூருக்கு வந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாக 12 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி தொடங்கி வைத்தாா். தற்போது இந்த 21,776 பேரும் சட்டப்பேரவை தொகுதிவாரியாக வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஏற்கெனவே 4 நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள 18,035 பட்டாக்கள், தற்போது வழங்கப்பட்டு வரும் 21,776 பட்டாக்களையும் சோ்த்து மொத்தம் 39,811 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.