செய்திகள் :

``வேளாங்கண்ணி கலைஞர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்..'' -சுற்றுலா பயணிகள் கோரிக்கை

post image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய அளவில் அதிக மக்கள் இங்கு அமைந்துள்ள கிறிஸ்தவ புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், வழிபட்டுச் செல்கின்றனர்.

மேலும் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாள்களில் இங்கு வரும் பொதுமக்கள் பேராலயத்தையொட்டி அமைந்துள்ள கடற்கரையை பார்த்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த கடற்கரைக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கலைஞர் பூங்கா இடிபாடுகளுடன் பொதுமக்களும் குழந்தைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வேளாங்கண்ணி கலைஞர் பூங்கா

இதுகுறித்து அங்குள்ள ஜோசப் என்ற சுற்றுலா பயணியிடம் விசாரித்தோம், "வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக திண்டிவனத்திலிருந்து நாங்கள் கூட்டமாக வருவோம். வந்து அன்னை மாதாவை பிரார்த்தித்து விட்டு எங்கள் பாவங்களை துடைத்த பிறகு, இந்த கடற்கரையில் கொண்டாடி மகிழ்வோம்.

கடந்த மூன்று வருடங்களாக இங்குள்ள கலைஞர் பூங்கா சரி செய்யப்படாமலே உள்ளது. இந்த கலைஞர் பூங்காவில் குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதுடன், கடற்கரை பகுதி சுகாதார சீர்கேட்டுடன் இருந்து வருகிறது.

எதிர் வருவது கோடைகாலம் என்பதால் நிறைய சுற்றுலாப் பயணிகள் இந்த வேளாங்கண்ணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் இந்த கலைஞர் பூங்காவை மேலும் மெருகூட்டினாள் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்" என்று கூறினார்.

வேளாங்கண்ணி கலைஞர் பூங்கா

தொடர்ந்து சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவர் டயானா செர்லினிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம் "இந்த கலைஞர் பூங்கா தொடர்பாக பணிகள் தொடர முனைப்பு காட்டி வருகிறோம் கூடிய விரைவில் பூங்கா புனரமைக்கப்படும்" என்று கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக எந்த ஒரு முன்னேற்றமும் காணாமல் இருக்கும் இந்த கலைஞர் பூங்காவை புனரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?* "கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தி... மேலும் பார்க்க

Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi! Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு ... மேலும் பார்க்க

Maoists: ``ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்'' - அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே து... மேலும் பார்க்க

தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்; மிரட்டும் அமெரிக்கா - இனி என்ன தான் ஆகும்?

2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எத... மேலும் பார்க்க

`குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம்' - சாதித்த கேரள இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி!

குங்குமப்பூ நம் நாட்டில் காஷ்மீர் மட்டுமே நல்லபடியாக விளைச்சலை கொடுத்து வருகிறது. காஷ்மீரில் நிலவும் சீதோஷ்ண நிலைதான் குங்குமப்பூ விளைச்சலுக்கு கைகொடுக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் குங்குமப்பூ விவசா... மேலும் பார்க்க