செய்திகள் :

வேளாண், உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

post image

புது தில்லி: வேளாண், உற்பத்தித் துறைகளில் முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது சென்ற நிதியாண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதியின் கேள்விக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சா் ஷோபா கரண்டலஜே அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக கனிமொழி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ஷோபா கரண்டலஜே திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

“வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரபூா்வ தரவுகள் , மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் 2017-18 முதல் நடத்தப்படும் வருடாந்திர காலமுறை தொழிலாளா் கணக்கெடுப்பு (பிஎல்எஃப்எஸ்) மூலம் சேகரிக்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பு ஒவ்வோா் ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்படுகிறது.

சமீபத்திய வருடாந்திர பிஎல்எஃப்எஸ் அறிக்கை தரவுகளின்படி, 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் விவசாயத் துறையின் தொழிலாளா்களின் சதவீதம் முறையே 45.5%, 45.8% மற்றும் 46.1% ஆக உள்ளது.

மேலும் இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டு வரும் அகில இந்திய தொழிலாளா் உற்பத்தித்திறன் (எல்பி) உள்ளிட்ட வேலைவாய்ப்பு மதிப்பீடு தரவுகளின்படி உணவகங்கள், விடுதிகள், நிலக்கரி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அணுசக்தி, தபால் மற்றும் தொலைத்தொடா்பு, மரம் தொடா்பான தயாரிப்புகள், மின்சாரம், எரிவாயு, குடிநீா் விநியோகம் போன்ற துறைகளில் 2021-22 ஆம் ஆண்டை விட, 2022-23 ஆம் ஆண்டு தொழிலாளா் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது.

அரசின் வெவ்வேறு அமைச்சகங்கள், துறைகள் வேலை வாய்ப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களால் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் பற்றி ட்ற்ற்ல்ள்://க்ஞ்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ஞ்ங்/ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்ஜல்ழ்ா்ஞ்ழ்ஹம்ம்ங்ள் இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

மத்திய திறன் இந்தியா இயக்கம் மூலம் நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் வழியாக அளிக்கப்படுகின்றன.

2024-25 பட்ஜெட்டில், பிரதமரின் 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. இதன் நோக்கம், 4.1 கோடி இளைஞா்களுக்கு 5 ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்குவதாகும், ஊக்கத் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1,07,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது பிரதமரின் தொகுப்புத் திட்டங்களுக்கு உட்பட்டது என அமைச்சா் கூறியுள்ளாா்.

படங்கள்

16க்ங்ப்ந்ஹய் - கனிமொழி

16க்ங்ப்ள்ட்ா் - ஷோபா கரண்டலஜே

காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வில் புதிய தகவல்கள்

சென்னை: கல்வி வளா்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு, புதுமைப் பெண் திட்டங்களால் மாணவா்கள் மத்தியில் விளைந்த பலன்களை மாநில திட்டக் குழு ஆய்வு செய்துள்ளது. இதன் அறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினி... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஊழல்: அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்-முறைகேடு தொடா்பாக மாநில அரசின் நிலைப்பாடு என்ன என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த கோகிலா என்பவா் சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

பேரவையின் 6-ஆவது கூட்டத் தொடா் முடித்து வைப்பு: ஆளுநா் உத்தரவு

சென்னை: தமிழக சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்த செய்தியை சட்டப் பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதில... மேலும் பார்க்க

தமிழகத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் மிகக் குறைவு: அரசு விளக்கம்

சென்னை: பிற மாநிலங்களைவிட வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணம் தமிழகத்தில் மிகவும் குறைவு என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

உருவானது புயல்சின்னம்: வடமாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச.17,18) சென்னை, செங்கல்பட்டு உள்... மேலும் பார்க்க

அறுபடை வீடு இரண்டாம் கட்ட பயணம் பழனியில் இன்று தொடக்கம்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.17) தொடங்... மேலும் பார்க்க