செய்திகள் :

வேளாண் நிதிநிலை அறிக்கை - 2025 - 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!

post image

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார்.

நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

வேளாண் துறையுடன் கால்நடைத் துறை, மீன்வளத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுக சட்டப்பேரவைப உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றுள்ளனர்.

உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலநை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன்.

பொருளதாரத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி, பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் பிடித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

1.86 லட்சம் மின் இணைப்புகள்

1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.

147 லட்சம் டன் நெல் கொள்முதல்

2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது,

பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு

டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

431 இளைஞர்கள் தொழில் முனைவோர்

வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.

கரும்பு உற்பத்தியில் 2 ஆவது இடம்

கரும்பு உற்பத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகித்து வருகிறது.

1000 முதல்வர் உழவர் நல சேவை மையம்

முதல்வர் மருந்தகம் போன்று 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு!

பாலிடெக்னிக் கல்லூரிரிகளில் படித்து நீண்டகாலமாக நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத் தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் த... மேலும் பார்க்க

360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம்!

சென்னை: பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவிகிதத்தில் மானிய விலையில் வழங்கப்படும், 360 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவும் திட்டம் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை... மேலும் பார்க்க

வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2025-2026: முக்கிய புதிய திட்டங்கள்

* ரூ.42 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் ஆலோசனைகள் வழங்கிட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் மூலம் 1000 முதல்விரின் உழவர் நல சேவை மையங்கள். * நெல் உற்பத்தியினை அதிகரித்திட ரூ.1... மேலும் பார்க்க

ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் “பனை மேம்பாட்டு இயக்கம்” உருவாக்கப்படும். புதிய பலா இரகங்களை பரவலாக்கவும், பலாவின் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா ம... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் த... மேலும் பார்க்க

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நித... மேலும் பார்க்க