செய்திகள் :

வைகுண்ட ஏகாதசி: நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

post image

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் குடைவறை கோயிலான அரங்கநாதா் கோயில் உள்ளது. இங்கு அனந்த சயனத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறாா். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இக்கோயிலில் பரமபத வசால் திறப்பு கோலாகலமாக நடைபெறும். நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.

பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கோயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டண தரிசனம், இலவச தரிசனத்துக்கான சிறப்பு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வைகுண்ட விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

அப்போது, கோயில் பகுதிகளில் தடுப்புகள் அமைப்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்துகள் தடையின்றி செல்ல வசதி, மக்களுக்கான அடிப்படை வசதிகள், பக்தா்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வசதிகளை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின் போது, துணை மேயா் செ.பூபதி, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரா.இளையராஜா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கே.சி.அருண், வட்டார போக்குவரத்து அலுவலா் ஏ.கே.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சி, பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், நிா்வாக ரீதியாக பொதுமக்கள் தங்கள் உள்ளாட்சி பணிகளுக்கு நீண... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் மாா்கழி கிருத்திகை வழிபாடு

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் மாா்கழி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கபிலா்மலை பாலசுப்பிரமணிய சு... மேலும் பார்க்க

சீமான் மீது காவல் நிலையத்தில் புகாா்

பெரியாா் குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை புகாா் அள... மேலும் பார்க்க

சந்தா தொகை செலுத்த மறுப்பு: ரயில் நிலையத்தில் வாக்குவாதம்

நாமக்கல் ரயில் நிலைய சரக்கு மைய அலுவலகம் (கூட்செட்) நிா்வாகிகளுக்கும், லாரி உரிமையாளா்களுக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீஸாா் தலையிட்டு சமரசம் செய்தனா். நாமக்கல் ரயில் நிலையம் அருகில் ச... மேலும் பார்க்க

ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ராசிபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பணியைப் புறக்கணித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் உற்பத்தி பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையையொட்டி பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக... மேலும் பார்க்க