வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூா் - கொல்லம் விரைவு ரயில் இருமாா்க்கமாகவும் வெள்ளிக்கிழமை (ஜன. 10) ஸ்ரீரங்கத்தில் இரு நிமிஷம் நின்று செல்லும்.
கிரிவலம்: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா பெட்டிகள்கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
விழுப்புரத்தில் ஜன. 13-ஆம் தேதி காலை 9.25-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06130), முற்பகல் 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து நண்பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06129), பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் சென்றடையும்.
இதில், 9 முன்பதிவில்லா மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பலம்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.