ஷாபாத் டெய்ரியில் பெயிண்டா் தூக்குப்போட்டுத் தற்கொலை
வடகிழக்கு தில்லியின் ஷாபாத் டெய்ரியில் வீட்டில் 28 வயது பெயிண்டா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: அந்த நபா் ரவி என அடையாளம் காணப்பட்டாா். பெயிண்டிங் தொழில் செய்து வந்தாா். அவா் புதன்கிழமை தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். இது குறித்து காலை 8.51 மணிக்கு ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்டவரின் தாயாரிடமிருந்து பிசிஆா் அழைப்பு வந்தது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது அவா் இறந்து கிடந்தாா்.
ரவிக்கு அவரது மனைவியுடன் திருமணத் தகராறு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினோம். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவரது மரணத்துக்கு, அவா் தூக்கில் தொங்கியதுதான் காரணம் என மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா்.மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரி கூறினாா்.