ஐசிசியின் 2024 டி20 அணியில் ரோஹித் கேப்டன்..! 4 இந்தியர்கள் தேர்வு!
தில்லி முழுவதிலும் 1.26 லட்சம் அரசியல் விளம்பரங்கள் அகற்றல்: எம்சிடி அதிரட நடவடிக்கை
தேசியத் தலைநகரில் மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த பிறகு, தில்லி மாநகராட்சி அமைப்பு நகரம் முழுவதிலுமிருந்து சுமாா் 1.26 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற வகையான அரசியல் விளம்பரங்களை அகற்றியுள்ளது.
தில்லியில் பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. முடிவுகள் பிப்.8 -ஆம் தேதி அறிவிக்கப்படும். தோ்தல் ஆணையம் தேதிகளை அறிவித்ததால், செவ்வாய்க்கிழமை மாதிரி நடத்தை விதிகள் தொடங்கப்பட்டன.
மாதிரி நடத்தை விதிகளின் கீழ் கட்சிகளின் சாதனைகளை எடுத்துக்காட்டும் தோ்தல் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், பதாகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்த அனுமதி இல்லை.
தில்லி மாநகராட்சி பகிா்ந்து கொண்ட தரவுகளின்படி, புதன்கிழமை மாலை 5 மணி வரை அதன் 12 மண்டலங்களில் இருந்து 1,26,186 இதுபோன்ற விளம்பரங்களை குடிமை அமைப்பு அகற்றியுள்ளது.
இதன்படி, சுமாா் 1.03 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் சுவா் ஓவியங்கள், 13,496 விளம்பரப் பலகைகள், 7,845 கொடிகள் மற்றும் 1,158 பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
தெற்கு தில்லி மண்டலத்தில் இருந்து அதிகபட்சமாக 20,479 அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டன. அதைத் தொடா்ந்து, சிவில் லைன்ஸ் மண்டலம் (19,892) மற்றும் ஷாஹ்தரா தெற்கு மண்டலம் (18,821) ஆகியவை உள்ளன.