செய்திகள் :

ஷாருக்கான், ஆமீர் கான்.. புது வீட்டில் குடியேறும் பாலிவுட் பிரபலங்கள்; பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள பாலிஹில் பகுதியில் இருக்கும் விர்கோ ஹவுசிங் சொசைட்டியில் வசித்து வருகிறார்.

இக்கட்டிடத்தில் ஆமீர் கானுக்கு பல வீடுகள் இருக்கிறது. இந்த கட்டிடம் மிகவும் பழமையாகிவிட்டதால் அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அக்கட்டிடத்தில் வசிப்பவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தனியார் பில்டர் ஒருவருடன் ஹவுசிங் சொசைட்டி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதையடுத்து இக்கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் காலி செய்து வருகின்றனர்.

அமீர் கான்

ஆமீர் கானும் தனது குடும்பத்தோடு இக்கட்டிடத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளார். பழைய கட்டிடம் இருந்த இடத்தில் பல அடுக்கு சொகுசு குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீடும் கடற்கரையை கண்டுகளிக்கும் விதமாக 4 அல்லது 5 படுக்கை வசதி கொண்ட வீடாக கட்டப்படும்.

ஒவ்வொரு வீடு விலையும் ரூ.100 கோடி வரை இருக்கும் என்று இத்திட்டத்தை செயல்படுத்த இருக்கும் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனன் ஷா தெரிவித்துள்ளார்.

பழைய கட்டிடம் இடிக்கப்படுவதால் ஆமீர் கான் புதிய வீடு ஒன்றை 9 கோடிக்கு வாங்கி இருக்கிறார். 1027 சதுர அடி கொண்ட அந்த வீட்டிற்கு ஆமீர் கான் விரைவில் குடியேற இருக்கிறார்.

இந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்தது. பழைய வீடு இருக்கும் இடத்திற்கு அருகேயே புதிய வீட்டையும் ஆமீர் கான் வாங்கி இருக்கிறார்.

ஏற்கெனவே மும்பை பாந்த்ராவில் வசிக்கும் நடிகர் ஷாருக்கானின் மன்னத் பங்களா புதுப்பித்து விரிவுபடுத்தி கட்டப்பட இருக்கிறது. இதற்காக ஷாருக்கான் தனது மன்னத் பங்களாவை காலி செய்துவிட்டு வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

மன்னத் பங்களாவில் கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட இருக்கிறது. மொத்தம் ரூ.25 கோடியில் புதுப்பிப்பு மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஷாருக்கான் இதற்காக ரூ.8.7 கோடி வாடகைக்கு மூன்று மாடிகளை எடுத்துக்கொண்டு வாடகைக்கு சென்று இருக்கிறார். இப்போது ஷாருக்கானும், ஆமிர் கானும் பாலிஹில் பகுதியில் வசிக்கின்றனர்.

தீபிகா படுகோனே

நடிகர் தீபிகா படுகோனேயும் மகளோடு புதிய வீட்டிற்கு குடியேற இருக்கிறார். இதே போன்று நடிகர் ரன்பீர் கபூரும் தனது பழைய வீடு இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற இருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel