செய்திகள் :

``ஸ்டாலின் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட வரவில்லை'' - அதிமுக டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு

post image

"இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்களை மத்திய அரசு ஒதுக்கியதில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு இடம் கூட பெற முடியாத அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது" என்று அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவ படிப்பு

இதுகுறித்து டாக்டர் பா.சரவணன் விடுத்துள்ள அறிக்கையில்,

"தமிழகத்தில் ஏராளமான அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி மருத்துவத்துறையில் ஒரு சகாப்தம் படைத்த அரசாக ஜெயலலிதாவின் அரசு இருந்தது.

குறிப்பாக, 74 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுடன் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது .

கர்நாடகாவில் 70 கல்லூரிகள், மகாராஷ்டிராவில் 68 கல்லூரிகள், தெலுங்கானவில் 56 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில்

கடந்த 10 ஆண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சியில் மட்டும் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,450 மருத்துவ இடங்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுத் தந்தார்.

மேலும், மதுரையில் 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவின் ஆட்சியில் 36,000 மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

டாக்டர் சரவணன்

எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்விலிருந்து காப்பாற்றவும், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை நினைவாக்கும் வகையில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

இதன் மூலம் ஆண்டுக்கு 660 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பெற்று வருகிறார்கள். இந்த வாய்ப்பைப் பெற்ற மாணவர்கள் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின்போது தங்களின் நன்றியினைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்டாலின்

ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் 53 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு கல்லூரியைக்கூட திறக்கவில்லை.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி உருவாக்கிக் கொடுத்த அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குப் போதுமான நிர்வாக வசதி இல்லை, பேராசிரியர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஏற்கெனவே இது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்ததால்தான் மருத்துவப் படிப்புக்கான கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்படவில்லை.

மருத்துவக் கல்லூரி அடிப்படை வசதிகள்

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 5,550 இடங்களும், இ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லூரி மூலம் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 3,400 இடங்களும், 3 பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் மூலம் 450 இடங்களும், 20 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,950 இடங்களும் என 11,000 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன.

ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அளவில் ஆசிரியர்கள் இருந்து வருவதாலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது, அதை சரி செய்ய முடியவில்லை.

தமிழக அரசு

சுகாதாரத்துறையில் தமிழக அரசு தோல்வி

தற்போது கூட மத்திய அரசு இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்களை அதிகரித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 350 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அந்த 350 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் கிடைத்துள்ளன.

அரசு கல்லூரிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தற்போது உள்ள மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை அடிப்படையில் 500 மருத்துவ இடங்கள் வந்திருக்க வேண்டும்.

ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. ஏனென்றால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையான கட்டமைப்புகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுதான்.

சுகாதாரத்துறையில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதற்கு இது சாட்சியாக உள்ளது.

தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம்

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களால் 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளத்தைக்கூட பெற்றுத்தர முடியவில்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் மத்திய அரசிடம் வலியுறுத்தி ரூ 2,999 கோடியைப் பெற்றுத் தந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தற்போது இந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்திற்கு கூடுதலாக மருத்துவ இடங்கள் வேண்டும் என்று கோரிக்கையை வைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.

இது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் மாபெரும் பாடத்தைப் புகட்டுவார்கள்.

மீண்டும் 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். நிச்சயம் மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்றுத் தருவார்" எனத் தெரிவித்துள்ளார்.

``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை... மேலும் பார்க்க

கழுகார்: தாமரைக் கட்சியில் `புது' அணி டு ரகசிய பூஜை, பரிகாரங்கள்... வேண்டுதல் வைக்கும் உறவுக்காரர்!

தலைமை தாங்கும் பெண் நிர்வாகி!தாமரைக் கட்சியில் உருவானது புது அணி...தாமரைக் கட்சியில் தற்போதைய தலைவர் அணி... மாஜி அணி என ஏற்கெனவே பல அணிகள் இருக்கின்றன. அதில், மற்றொரு புதிய அணி வேகமாக பவருக்கு வந்திரு... மேலும் பார்க்க

"கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்" - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டை... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிறகு தனிமையில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு, யாருக்கும் தெரியக்கூடாது என முகத்தை மூடிச் சென்றதாகக் ... மேலும் பார்க்க

``கானை மேயராக விடாதீர்கள்'' - சர்ச்சையை கிளப்பிய மும்பை பாஜக தலைவர் பேச்சு

மும்பை மாநகராட்சிக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்று மேயர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. தற்போது சிவசேனா இர... மேலும் பார்க்க