செய்திகள் :

ஸ்மார்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

post image

நடப்பு நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகளாவிய ஸ்மார்ட்போன் மையமாக இந்தியா மாறியுள்ளது. ​​நாட்டில் விற்பனையாகும் 99.2% ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

2025 நிதியாண்டின் 11 மாதங்களில், இந்தியாவின் மொபைல் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியாக உயர்ந்து, உலகளவில் தயாரிப்புத் துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி 0.2 பில்லியன் டாலர்களாகவே இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், 21 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் விகிதம் 2014 - 2015-ல் 26% ஆக இருந்தது. ஆனால், 2024 - 2025ல் 99.2% ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ல் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காக இரு தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 300க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | நாட்டின் ஏற்றுமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி: மக்களவையில் பிரதமர் மோடி உரை

புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளு... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராப்ரி தேவி!

ரயில்வே வேலைக்காக நிலத்தைலஞ்சமாகப்பெற்ற ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்துபிகார்முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி... மேலும் பார்க்க