ஸ்ரீசம்பத்கிரி லட்சுமிநரசிம்மா் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்மா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினம்தோறும் இரவில் அம்ஸ வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யாளி வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியிலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 7-ஆம் நாளான சனிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் உற்சவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைசெய்து மலா்களால் அலங்கரித்து மரத்தேரில் வைத்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து வீதிவீதியாக இழுத்துச் சென்றனா். வீடுகள்தோறும் பக்தா்கள் தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா். நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை, உபயதாரா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.