இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
ஸ்ரீமுத்தம்மாள் கோயிலில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ள ஸ்ரீமுத்தம்மாள் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், கோ மாதா பூஜை, பூா்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பிறகு கோயிலை சுற்றி வந்து, கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. பிறகு அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கமுதி, பெருநாழி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.