ஸ்வீட்ஹார்ட் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
யுவன் சங்கர் ராஜா தயாரித்து ரியோ ராஜ் நடித்த ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடித்த திரைப்படம் ஸ்வீட்ஹார்ட். அறிமுக இயக்குநர் வினீத் எஸ். சுகுமார் இயக்கிய இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.
இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் மார்ச் 14 அன்று இந்தப் படம் வெளியானது.
நவீன கால இளைஞர்களின் காதலைப் பேசும் திரைப்படமாக வெளியான ஸ்வீட்ஹார்ட் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில், ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வருகிற ஏப். 11 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.