‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!
ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!
நடிகர் சித்தார்த் ஹாலிவுட் இணையத் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் இறுதியாக நடித்த சித்தா, மிஸ் யூ, 3 பிஎச்கே ஆகிய திரைப்படங்கள் கவனிக்கப்பட்டன. சித்தா விமர்சன ரீதியாகவும் சித்தார்த்துக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில், சித்தார்த் புதிய இணையத்தொடரில் நடிக்கவுள்ளார். நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள இத்தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அன்அக்கஸ்டம்ட் எர்த் (unaccustomed earth ) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரை வார்னர் பிதர்ஸ் தயாரிக்கின்றனர். ஜும்பா லகிரி (jhumpa lahiri) என்கிற நாவலைத் தழுவி உருவாகும் இத்தொடரின் படப்பிடிப்பு லண்டனில் துவங்கவுள்ளது.
தமிழ் சினிமாவிலிருந்து சர்வதேசம் வரை சென்ற சித்தார்த்துக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இரண்டாவது திருமணமா? மீனா பதில்!