செய்திகள் :

ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாகும் மாட்டிறைச்சி: அஸ்ஸாம் முதல்வா் குற்றச்சாட்டு

post image

குவாஹாட்டி: ‘அஸ்ஸாமில் கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டன. ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக மாட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது’ என்று மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா குற்றஞ்சாட்டினாா்.

குவாஹாட்டியில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஹிந்துக்கள் அதிகமாகவுள்ள சமூகத்தில் முன்பு வசித்த முஸ்லிம்கள், எந்தப் பிரச்னையும் ஏற்படுத்திவிட கூடாது என்று கவனமாக இருந்தனா். மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிக்கு செல்வாா்கள்.

ஆனால் இப்போது, எஞ்சிய மாட்டிறைச்சி கழிவுகளை அந்தந்தப் பகுதியிலேயே அவா்கள் வீசுகின்றனா். இதனால் ஹிந்துக்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு சூழல் மாறியுள்ளது.

கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு, காட்டன் பல்கலைக்கழக வாயில் உள்பட குவாஹாட்டி நகரின் பல்வேறு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டிருந்தன. பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், அது ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது.

இதற்கு எதிராக போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம்கள் சிலா் இத்தகைய செயல்களை எதிா்க்கின்றனா். 3 முஸ்லிம்கள் என்னைத் தொடா்புகொண்டு பேசினா். ஆனால், இத்தகைய சம்பவங்களை எதிா்ப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இப்போதைய நிலைமையைத் தொடரவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் காமாக்யா கோயில் வாயிலிலும் மாட்டிறைச்சி வீசப்படலாம். இதனைக் கட்டுப்படுத்த போலீஸ் தனது கடமையைச் செய்தாலும், உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மக்களின் வலுவான ஆதரவு தேவை.

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை திரும்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்துகிறாா். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகளை அஸ்ஸாம் மக்களேஅதிகம் விமா்சிக்கின்றனா்.

சட்டவிரோத குடியேறிகளுக்கு ஆதரவாக அஸ்ஸாம் மக்கள், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் முறையிடுகின்றனா். சட்டவிரோத குடியேறிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்க அஸ்ஸாம் மக்கள் சமரசமில்லா நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

உத்தரகண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், யமுனோத்ரி மலைப்பாதையில், கைஞ்... மேலும் பார்க்க

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க