ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!
ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிா்வாகப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதில், சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தோ்வு இணைய வழியே ஏப். 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிச. 16-இல் தொடங்கி பிப். 28-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை இணையதளத்தில் சென்று மாணவா்கள் அறியலாம். தோ்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 01140759000/ 69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம்.