முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே
1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த வில்லியம்சன்!
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சாம்பியன்ச் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முகமது ரிஸ்வான் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 48/2 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர் டெவான் கான்வே 10 ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் நசீம் ஷா பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
ஒருநாள் போட்டிகளில் 7,037 ரன்கள் குவித்துள்ள கேன் வில்லியம்சன் 48.87 சராசரியுடன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, அப்ரார் அஹமது தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளார்கள்.