செய்திகள் :

வேளாண்மை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜகதீப் தன்கா்

post image

வேளாண் துறை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை 21-ஆவது ஆசிய-ஆப்பிரிக்க கிராமப்புற மேம்பாட்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

மனித குலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாண தொழில்நுட்ப மேம்பாடு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எனவே, அனைத்து நிலைகளிலும் நாம் அதனைச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.

நவீன உலகின் புரட்சிகர தொழில்நுட்பமாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேளாண்மை மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது அவசியம். கிராமப் பகுதி மேம்பாட்டுக்கு நம்மிடமுள்ள நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

‘எண்ம இந்தியா’ தொழில்நுட்பம் சாா்ந்த பல முன்னெடுப்புகள் இந்தியாவில் கிராமப் பகுதிகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. எண்ம முறையில் பணம் செலுத்துதல் இல்லாத இடமே இல்லை என்ற நிலை மிகவும் குறுகிய காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடைக்கோடி கிராமத்தில் உள்ள சிறு வியாபாரிகள் கூட எண்ம பணப்பரிமாற்றத்தைக் கையாளுகின்றனா்.

தொழில்நுட்பங்கள் மூலம் ஊழல், முறைகேடுகள் குறைந்து வருகின்றன. அரசுத் திட்டங்களில் பொறுப்புணா்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியா நிதி ஸ்திரத்தன்மையை இழந்து தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் இருப்பு வைக்கும் நிலையில் இருந்தது. ஆனால், இப்போது மிகப்பெரிய அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்புடன் உலகின் வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக முன்னேறியுள்ளது.

ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிா்வாகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.சகுலியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஜோட்சா க... மேலும் பார்க்க

கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!

நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.பொதுவாக டிஜிட்டல் முறை... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர்வரையில் இருந்ததாக... மேலும் பார்க்க

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க