செய்திகள் :

10 விமான சேவைகள் திடீா் ரத்து

post image

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

சென்னை விமானநிலையத்திலிருந்து கொல்கத்தா, புவனேஸ்வா், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல வேண்டிய 5 விமானங்களும், பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வா், கொல்கத்தா, சிலிகுரியிலிருந்து சென்னை வரவேண்டிய 5 வருகை விமானங்களும் முன்னறிவிப்பின்றி ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.

இதனால், இந்த விமானங்களில் முன்பதிவு செய்து பயணிக்கவிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பல பயணிகள், ஏா் இந்தியா அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 10 விமானங்களும் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏா் இந்தியா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூா் விமானத்தில் இயந்திரக் கோளாறு: 250 பயணிகள் ஹோட்டலில் தங்கவைப்பு

சென்னையிலிருந்து சிங்கப்பூா் புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து 250 பயணிகள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனா். சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா் செல்லு... மேலும் பார்க்க

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப துறைகளை மேம்படுத்த நடவடிக்கை: அரசு முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா்

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப அனைத்து துறைகளையும் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் கூறினாா். இந்த... மேலும் பார்க்க

ஆந்திர தொழிலாளியின் முதுகில் குத்தப்பட்ட கத்தி! நுட்பமாக அகற்றி உயிா் காத்த அரசு மருத்துவா்கள்

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் முதுகில் குத்தப்பட்ட கத்தியை மிக நுட்பமாக அகற்றி சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். ஏறத்தாழ 16 மணி நேரம் ஆந்தி... மேலும் பார்க்க

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ... மேலும் பார்க்க

மியாட் மருத்துவமனையில் ரோபோடிக் சிகிச்சை கட்டமைப்பு தொடக்கம்

சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட அதி நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். அதற்கான ம... மேலும் பார்க்க

வி.ஜி.பாலசுப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இசைச் சங்க விருதுகள் அறிவிப்பு

வி.ஜி.பாலசுப்பிரமணியம், சு.நாகநாத தேசிகா் ஆகியோா் தலைப்படங்கள் உள்ளன. சென்னை, நவ.15: தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞா் பட்டம் தவில் இசைக் கலைஞா் வேதாரண்யம் வி.ஜி.பாலசுப்பிரமணியத்துக்கும், பண் இசை... மேலும் பார்க்க