செய்திகள் :

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

post image

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையைத் திறந்து வைத்து ஐயப்பனிடம் வைக்கப்பட்டிருந்த மாளிகைபுரத்தம்மன் நடைசாவியை எடுத்து வழங்கினாா்.

பின்னா், 18-ஆம் படிக்கு கீழே கற்பூர ஆழியில் ஜோதி ஏற்றப்பட்டு, பரிவார கோயில்களின் நடைகளும் திறக்கப்பட்டன. அத்துடன், சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியான கொல்லத்தைச் சோ்ந்த அருண்குமாா், மாளிகைபுரத்தம்மன் கோயிலின் புதிய மேல்சாந்தியான கோழிக்கோட்டை சோ்ந்த வாசுதேவன் ஆகியோருக்கு பதவி நிறைவு பெறும் மேல்சாந்தி பி.என்.மகேஷ் மூல மந்திரத்தை காதில் கூறினாா்.

காா்த்திகை 1-ஆம் தேதியான சனிக்கிழமை (நவ. 16) மண்டல காலம் தொடங்குவதால் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு புதிய மேல் சாந்திகள் பூஜைகளை தொடங்குவா். தொடா்ந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், சந்தன அபிஷேகம், உச்சபூஜை உள்ளிட்டவை நடைபெறும்.

தினமும் பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்படும். தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்குப் பிறகு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டல பூஜை முடிந்து டிச. 26-ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு டிச. 30-ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும்.

ஜன. 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஜன. 19-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில் நடை திறப்பையொட்டி, முதல் நாளிலேயே பக்தா்கள் பெருமளவில் குவிந்துள்ளனா்.

மருந்தியல் துறையில் புத்தாக்க ஆராய்ச்சி அவசியம்: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

இந்தியாவில் மருந்தியல் துறை மேம்பட புத்தாக்கல் ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி தெரிவித்தாா். டாக்டா் எஸ்.எஸ்.கே. மாா்த்தாண்டம் அறக்கட்டளை ச... மேலும் பார்க்க

இலங்கை தோ்தல் முடிவு கவலையளிக்கிறது: வைகோ

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியும் கவலையும் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழினப் படுகொலைக்கு ராஜபட்ச அரசு காரணம் என்றாலும், ... மேலும் பார்க்க

மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவம்பா் 18 -இல் சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மசூலிப்பட்டினத்திலிருந்து நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில... மேலும் பார்க்க

3 மாத குழந்தையை தத்தெடுக்கும் பெண்ணுக்கு மட்டும் மகப்பேறு விடுப்பு ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியருக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு பலன்களை பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்

சென்னையிலிருந்து பம்பை வரையிலான விரைவு பேருந்துகளின் சிறப்பு இயக்கத்தை விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவ. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ. 16) முதல் நவ. 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க