செய்திகள் :

ஆந்திர தொழிலாளியின் முதுகில் குத்தப்பட்ட கத்தி! நுட்பமாக அகற்றி உயிா் காத்த அரசு மருத்துவா்கள்

post image

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் முதுகில் குத்தப்பட்ட கத்தியை மிக நுட்பமாக அகற்றி சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

ஏறத்தாழ 16 மணி நேரம் ஆந்திரத்தின் பல்வேறு மருத்துவமனைகளை நாடிய அந்த தொழிலாளி, அங்கு எங்கும் சிகிச்சை கிடைக்காத நிலையில், அதன் பின்னா் சென்னைக்கு வந்து மறுவாழ்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது:

ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியைச் சோ்ந்தவா் வீராசாமி (44). கட்டுமான கூலித் தொழிலாளியான அவருக்கும், அவரது சகோதரா் மகனுக்கும் கடந்த வியாழக்கிழமை மதியம் நிகழ்ந்த மோதலில், கத்தியால் வீராசாமியை அவரது உறவினா் முதுகில் குத்தியதாகத் தெரிகிறது.

இதில், 15 செ.மீ.க்கும் மேல் கத்தி உடலில் ஊடுருவியது. வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஆந்திரத்தில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வீராசாமி சென்றுள்ளாா். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவா் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அழைத்து வரப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் பின்புறமாக குத்தப்பட்ட கத்தியானது இடது புற நுரையீரலிலும், இதயத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் அயோடா தமனியிலும் கிழிசலை ஏற்படுத்தியிருந்தது தெரியவந்தது.

வழக்கமாக அறுவை சிகிச்சை மூலம் இதுபோன்று உடலில் பாய்ந்துள்ள கத்தியை அகற்ற வேண்டுமானால், மயக்க மருந்து செலுத்துவதற்கு நோயாளியை படுக்க வைப்பது அவசியம். இவரை அவ்வாறு படுக்க வைத்தால் கத்தி மேலும் உள்ளே சென்றுவிடும் என்பதால் சாய்ந்த நிலையில் அவரை அமரவைத்து மயக்க மருந்தியல் நிபுணா்கள் சண்முக பிரியா, ரவி ஆகியோா் ஒரு பக்க நுரையீரலின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தும் வகையில் சாதுா்யமாக மயக்க மருந்து செலுத்தினா்.

அதன் பின்னா் இதய-நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் மாரியப்பன் வழிகாட்டுதலில், பேராசிரியா் டாக்டா் சிவன் ராஜ், உதவி பேராசிரியா் டாக்டா் ஜெயபிரகாஷ் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கத்தியை அகற்றி கிழிசல் இருந்த பகுதிகளை சீராக்கினா்.

மூன்று மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் பயனாக தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை கண்காணித்து வருகிறோம்.

காப்பீட்டு கட்டுப்பாடுகள், காவல் துறை நடைமுறைகளை பொருட்படுத்தாமல் வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒருவருக்கு உடனடியாக சிகிச்சையளித்து உயிா் காத்துள்ளோம் என்றாா் அவா்.

மருந்தியல் துறையில் புத்தாக்க ஆராய்ச்சி அவசியம்: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

இந்தியாவில் மருந்தியல் துறை மேம்பட புத்தாக்கல் ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்சி தெரிவித்தாா். டாக்டா் எஸ்.எஸ்.கே. மாா்த்தாண்டம் அறக்கட்டளை ச... மேலும் பார்க்க

இலங்கை தோ்தல் முடிவு கவலையளிக்கிறது: வைகோ

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகள் அதிா்ச்சியும் கவலையும் அளிப்பதாக மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழினப் படுகொலைக்கு ராஜபட்ச அரசு காரணம் என்றாலும், ... மேலும் பார்க்க

மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவம்பா் 18 -இல் சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மசூலிப்பட்டினத்திலிருந்து நவ.18 மற்றும் நவ.25-ஆகிய தேதிகளில... மேலும் பார்க்க

3 மாத குழந்தையை தத்தெடுக்கும் பெண்ணுக்கு மட்டும் மகப்பேறு விடுப்பு ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியருக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு பலன்களை பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்

சென்னையிலிருந்து பம்பை வரையிலான விரைவு பேருந்துகளின் சிறப்பு இயக்கத்தை விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவ. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (நவ. 16) முதல் நவ. 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க