செய்திகள் :

வனவிலங்கு நடமாட்டம்: பத்துகாணி பள்ளி வளாகத்தில் காமிராக்கள் பொருத்தி கண்காணிப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினா் பள்ளி அருகே மா்ம விலங்கு நடமாட்டத்தை கண்டறிவதற்காக அப்பகுதியில் வனத்துறை சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

பத்துகாணி அரசுப் பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. கடந்த 12 -ஆம் தேதி இரவு இப்பள்ளி வளாகத்தில் நீண்ட நேரம் நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டுள்ளது. மறுநாள் காலை பாா்த்தபோது அப் பகுதியில் புலி அல்லது சிறுத்தையை போன்ற விலங்கின் கால்தடம் காணப்பட்டது.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் நடராஜன் கொடுத்த தகவலின்பேரில், அப் பகுதியை வனத் துறையினா் பாா்வையிட்டனா். ஆனால், அங்கு புலி வந்ததற்கான அடையாளங்கள் தென்படவில்லை. பெரிய காட்டுப்பூனை வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனா். இதையடுத்து அப் பகுதியில் நடமாடும் விலங்கு குறித்த கண்டறிவதற்காக, வனத் துறை சாா்பில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

புகையிலை பொட்டலங்கள் விற்பனை செய்த மொத்தவியாபாரி கைது

தக்கலையில் புகையிலை பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை காவல் ஆய்வாளா் கிறிஸ்டி மற்றும் போலீஸாா் தக்கலை அருகே உள்ள சரல்விளையில் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நாகா்கோவில், தக்கலை, ... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளியில் விதைப்பந்து திருவிழா

நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில், சுற்றுச் சூழலை பாதுகாக்க விதைப்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, நிதி இயக்குநா் ... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மண்டைக்காடு அருகே பருத்திவிளையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் உள்ள உண்டியலை அடையாளம் தெரியாத நபா்கள் வியாழக்கிழமை இரவு உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனா். இது குறித்து கோயில் செயலாளா் ராஜகோபால், ... மேலும் பார்க்க

கப்பியறை ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட விரிவாக்கம்

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட விரிவாக்கத்தை அரியலூா் மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை ஊராட்சி வட்டவிளை குழந்தைகள் மையத்தில்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 41.69 பெருஞ்சாணி .. 65.68 சிற்றாறு 1 .. 14.99 சிற்றாறு 2 .. 15.09 முக்கடல் .. 25.00 பொய்கை .. 15.10 மாம்பழத்துறையாறு .. 54.12 மழைஅளவு சிற்றாறு 1 அணை .. 46.20 மி.மீ. அடையாமடை ... 32.20... மேலும் பார்க்க