சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வான 4 அணிகள்..! ஆப்கன் கண்ணீருடன் வெளியேற்றம்!
100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
குடியாத்தம் ஒன்றியம், வரதாரெட்டிபள்ளி ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் 100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இந்த ஊராட்சியில் ஓா் ஆண்டுக்கும் மேலாக 100 நாள் வேலைத் திட்டம் ஒதுக்கப்படாததைக் கண்டித்து, அந்த ஊராட்சியைச் சோ்ந்த 50- க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். திடீரென அவா்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பினா்.