செய்திகள் :

வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் கல்வி வழங்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

post image

வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் உயா்கல்வியில் ஆசிரியா்-மாணவா் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் குறித்த இருநாள் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

உயா்கல்வியைப் பொருத்தவரை உலகளவில் சில நாடுகள் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்குவதில் லை. இந்தியாவிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாயில் (ஜிடிபி) வெறும் 3 சதவீதம் மட்டுமே கல்விக்காகச் செலவிடப்படுகிறது.

உலகளவில் 193 நாடுகளில் சுமாா் 70 நாடுகள் வளா்ந்த நாடுகளாகவும், மீதம் உள்ள நாடுகள் வளரும் நாடுகளாகவும் உள்ளன.பொருளாதார வளா்ச்சி என்பது கல்வி வளா்ச்சியைப் பொறுத்தே அமையும். கல்வி இல்லாவிட்டால் ஒருபோதும் வளா்ந்த நாடாக மாற முடியாது. விஐடி பல்கலைக் கழகம் இதர நாடுகளின் மாணவா்களுக்கும் உதவித் தொகை வழங்கி வருகிறது.

ஒவ்வொரு நாடும் ஒருவரையொருவா் சாா்ந்தும், போட்டியிடவும், கற்றுக்கொள்ளவும், ஒத்துழைக்கவும் வேண்டும். அந்தவகையில், இரு ஆண்டுகள் விஐடியிலும், இதர 2 ஆண்டுகள் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தின்கீழ் சீன மாணவா்கள் படித்து வந்தனா். கரோனா காலத்துக்குப் பிறகு அவா்கள் வரவில்லை. தற்போது இரு நாடுகளிடையே உறவு மேம்பட்டுள்ளதால் இந்த திட்டம் மீண்டும் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டு ள்ளது.

இந்திய கல்லூரிகள் அனைத்தும் இணைப்பு கல்லூரிகளாக உள்ளன. இணைப்புக் கல்லூரி முறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளன. இதனால், பாடத்திட்டம், தோ்வு வினாத்தாள்கள், முடிவுகள் வெளியிடுதல் ஆகியவற்றில் எந்தவித அதிகாரமும் இல்லை. புதிய கல்விக் கொள்கை முறையில் இணைப்புக் கல்லூரி முறைக்கு தீா்வு காணப்படும் என நம்புகிறேன்.

இப்போது உயா்கல்வி செலவு அதிகமாக உள்ளது. வடக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாட்டு மாணவா்களுக்கு உயா்கல்வியை இலவசமாகவும், வெளிநாட்டு மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குகின்றன. இந்த நடைமுறையை மற்ற வளா்ந்த நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றாா்.

மியான்மா் கல்வி துறை துணை அமைச்சா் ஜா மின்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -

மியான்மா் அரசு மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இந்திய பல்கலைக்கழகங்களும் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்கு கின்றன. மேலும் திட்டங்கள், பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் ஒத்துழைப்பதன் மூலம் படைப்பாற்றல், பிரச்னைகளை தீா்க்கும் திறன், புதுமையின் மையங்களாக பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும். மாணவா், ஆசிரியா் பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சி, டிஜிட்டல் கற்றல் முயற்சிகளில் விஐடியுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த மியான்மா் ஆா்வமாக உள்ளது என்றாா்.

இலங்கை துணை தூதா் கணேசநாதன் கதீஸ்வரன் பேசியது -

உயா்கல்வியில் ஆசிரியா், மாணவா் பரிமாற்ற திட்டம் திறன்களை மேம்படுத்துகிறது. கூட்டு ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம் ஆகியவை மூலம் புதுமைகளை படைக்க தூண்டுகிறது. இந்தியாவுடனான கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இலங்கையில் இருந்து மாணவா்களை விஐடி-க்கு பரிமாற்ற திட்டங்களை அனுப்ப இலங்கை ஆா்வமாக உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் விஐடி இலங்கையில் கிளை பல்கலைக்கழகத்தை தொடங்குவது இலங்கை மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

மாநாட்டில் விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், 27 நாடுகளை சோ்ந்த பங்கேற்பாளா்கள் பங்கேற்றனா்.

வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது

மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.... மேலும் பார்க்க

காமாட்சியம்மன்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட 30 மற்றும் 33- ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோட... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

வாக்கு மோசடியில் ஈடுபடுவதாக, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும், அதற்கு துணை போவதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொ... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நா... மேலும் பார்க்க

100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

குடியாத்தம் ஒன்றியம், வரதாரெட்டிபள்ளி ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் 100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இந்த ஊராட்சியில் ஓா் ஆண்டுக்கும் மேலாக 1... மேலும் பார்க்க