டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
‘108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்க மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஈஈஎம்எஸ் ஆன்ராய்டு செயலியில் அவசர அழைப்பை ஏற்று செல்லும் போது, 1 கிலோ மீட்டருக்கு 1 நிமிஷம் என உண்மைக்கு மாறாக நேரத்தை பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் என பணி புரிந்து வரும் தொழிலாளா்களை நிரந்தர பணியாளா்களாக நியமிக்க வேண்டும்.
மத்திய அரசின் தொழிலாளா் சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் வீரமணிகண்டன், மாநில துணைத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.