செய்திகள் :

``11 ஆண்டுகளாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட நடத்தவில்லை'' - பிரதமர் மோடியை சாடும் காங்கிரஸ்

post image

பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட இதுவரை நடத்தவில்லை என காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவின் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பிரதமரின் 11 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, எழுத்துப்பூர்வமற்ற, தயாரிக்கப்பட்ட கேள்விகளல்லாத முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியுமா என சவால் விட்டோம்.

ஜெய்ராம் ரமேஷ்

ஆனால், பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களைக் கண்டால் ஏன் ஓடிப்போகிறார்? கேள்விகள் இன்னும் தயாரிக்கப்படவில்லையா? அல்லது தயாரிக்கப்பட்ட கேள்விகளை கேட்கும் பத்திரிக்கையாளர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? ஒருவேளை பதிலளிக்கும் பாரத் மண்டபம் இன்னும் தயாராகவில்லையோ? உலகில் உள்ள ஒவ்வொரு அரசின் தலைவரும் அவ்வப்போது சுதந்திரமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் 11 ஆண்டுகளாக அப்படி எதுவும் இல்லை. மோடி கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில்தான் நான் மனிதப் பிறவியல்ல எனப் பேசி பிரபலப்படுத்த முயன்றார். அது இல்லாமல் அவர் வேறு எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தத் துணிந்ததில்லை. ஒவ்வொரு மாதமும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி, அவரிடம் கேள்விகளை முன்வைக்க வேண்டும். அதுதான் நமது ஜனநாயக அடித்தளங்கள் நிறுவப்படுவதற்கான ஒரு வழி" என்றார்.

``அதிமுக கூட்டணி; எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பார்..'' - நடிகை கெளதமி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோயிலில் அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆ... மேலும் பார்க்க

Los Angeles Protest - பணக்கார நகரம் பற்றி எரிவது ஏன்? | Trump | National Guards | Decode

Los Angeles நகரில் உள்ள Undocumented Immigrants தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. Donald Trump போராட்டத்தை கட்டுப்படுத்த National Guards படையை களத்தில் இறக்கி இருப்பதற்கு California மாகாண... மேலும் பார்க்க

Doctor Vikatan: நமக்கே தெரியாமல் ஹார்ட் அட்டாக் வந்துபோயிருக்க வாய்ப்பு உண்டா..?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு ஃபிராக்சர் ஆனதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றோம். பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு ஏற்கெனவேஒருமுறைஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மர... மேலும் பார்க்க

Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்னியா ஆளுநர் வழக்கு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அப்போது இருந்து இப்போது வரை, அவர் கொண்டுவந்திருக்கும் பல சட்டங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளன. ஆனால், முதன்முதலாக பூதாகரமாக வெடித்த சர்ச... மேலும் பார்க்க

``கோயில், கிரிக்கெட் கிரவுண்ட் கூட்டம் குறித்து நான் அப்படி பேசவில்லை..'' - அமைச்சர் மனோ தங்கராஜ்

``அமுல் வருகிறது என்ற பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டோம்..'' - மனோ தங்கராஜ்புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மற்றும் ஆவின் குளிர் பதனக் கிடங்கு ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இயற்கை ... மேலும் பார்க்க