செய்திகள் :

`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன காரணம்?

post image

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடத்தப்பட்டது.

மணமகன் ஊர்மக்கள் படைசூழ திருமண ஊர்வலத்துடன் மணமகள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அனைத்து சடங்குகளும், இசைக் கச்சேரியும் நடந்து முடிந்தது. சடங்கின் இறுதியில் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது மணமகனுக்கு கை நடுங்கியிருக்கிறது. இதைப் பார்த்த மணமகள், திருமணத்தை நிறுத்தி, 'மணமகனுக்கு ஏதோ குறை இருக்கிறது. அவர் பைத்தியம். எனவே, அவரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன்' எனக் கத்தியிருக்கிறார்.

திருமணம்
திருமணம்

இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதற்கிடையில், மணமகள் குடும்பத்தினர் கொடுத்த வரதட்சணைப் பணத்தை திரும்பக் கேட்டனர். இது தொடர்பான செய்திகள் காவல் நிலையத்துக்கும் சென்றது. இருவீட்டாரையும் காவல்நிலையம் வரவழைத்த காவல்துறை அதிகாரி இருவீட்டாரையும் சமாதானம் செய்ய முயன்றார். இறுதிவரை பெண் வீட்டார் திருமணத்தை தொடர்வதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை.

இது தொடர்பாக பேசிய மணமகனின் தந்தை,``திருமணம் ரூ. 1 லட்சத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது. எங்களுக்கு ரூ90,000 ரொக்கமாக கிடைத்தது. நகைகளுக்கு ரூ30,000, புடவைகளுக்கு ரூ20,000, டிஜே இசைக்கு ரூ10,000, மீதமுள்ள பணம் போக்குவரத்துக்கு செலவிட்டோம். எல்லா பணமும் ஏற்கெனவே செலவாகிவிட்டது. அனைத்து சடங்குகளும் முடிந்துவிட்டன. சிந்தூர் வைக்கும்போது, ​​மணமகனின் கை நடுங்கியது.

மணமக்கள்
மணமக்கள்

ஒருவேளை சத்தம் அல்லது அழுத்தம் காரணமாக அந்த நடுக்கம் இருக்கலாம். பெண் திடீரென்று மணமகனுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். பின்னர் அவரது குடும்பத்தினர் பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கினர்." என்றார்.

இது தொடர்பாக பேசிய காவல்துறையினர், ``இருவீட்டாரையும் சமாதானம் செய்துவைக்க முயன்றோம். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. இதுவரை இருவீட்டார் தரப்பிலிருந்தும் எந்த புகாரும் கொடுக்கவில்லை" என்று தெரிவித்தனர்.

Chenab Bridge: "தேவையில்லாமல் என்னை பிரபலமாக்காதீர்கள்" - முக்கிய இன்ஜினீயர் மாதவி லதா பதிவு!

ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தைக் கடந்த வெள்ளி அன்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் பேராசிரியர் ஜி மாதவி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; "விசா விதிமுறை மீறில்" - அதிகாரிகள் சொல்வது என்ன?

கபே லேம் கைதுஉலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இ... மேலும் பார்க்க

கேரளா: "4 ஆம் வகுப்பு படிக்கிறப்ப அடிச்சான்" - 50 ஆண்டுகளாகத் தீராத வகுப்புத் தோழர்களின் சண்டை!

வகுப்புத் தோழர்கள்கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.ஜே. பாபு (62). இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாலோமின் நாடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் 4 வகுப்பு படித்த... மேலும் பார்க்க

திருமண சீர்... நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா! எந்தவகைப் பூனை தெரியுமா? - ஆச்சர்ய தகவல் இதோ!

சீனாவில் ஒரு குடும்பம் தன் மகளுக்கு திருமண சீர் என 100 சிவெட் பூனைகளை வழங்கியிருப்பது சர்வதேச வினோதங்களாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டி... மேலும் பார்க்க

9 மாதங்களில் 3 முறை லாட்டரி வென்ற 'ரியல் லக்கி பாஸ்கர்' - ரூ.21 கோடியை என்ன செய்யப் போகிறார்?

லாட்டரி சட்டப்பூர்வமாக உள்ள இடங்களில் வழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மிகப் பெரிய தொகையைப் பரிசாகத் தரும் லாட்டரிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலே... மேலும் பார்க்க

Trump: தடுக்கி விழுந்த ட்ரம்ப்: வைரலாகும் வீடியோ; ஜோ பைடனுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் மக்கள்!

2023-ம் ஆண்டு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அப்போதைய அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.... மேலும் பார்க்க