செய்திகள் :

திருமண சீர்... நூற்றுக்கணக்கான பூனைகளை கொடுத்த அப்பா! எந்தவகைப் பூனை தெரியுமா? - ஆச்சர்ய தகவல் இதோ!

post image

சீனாவில் ஒரு குடும்பம் தன் மகளுக்கு திருமண சீர் என 100 சிவெட் பூனைகளை வழங்கியிருப்பது சர்வதேச வினோதங்களாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில், 22 வயது மகளுக்கு ஒரு பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். தன் மகளுக்கு சீர் என 25 தங்கக் கட்டிகள், $20,000 ரொக்கம் (ரூ.17,13,297) , $11,500 (ரூ.9,85,145)மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், ஏழு சொத்துக்கள் இவைகளுடன் 100 சிவெட் பெண் பூனைகள் (அதன் இந்திய மதிப்பு ரூ.59,96,539) வழங்கியிருக்கின்றனர். மணமகன் வீட்டார் 10 தங்கக் கட்டிகள், $7,600 ரொக்கம் மற்றும் வைர நகைகளை வழங்கியிருக்கின்றனர்.

Civet Cat
Civet Cat

சிவெட் பூனைகள்:

சிவெட் (Civet) பூனை குடும்பத்தை சேர்ந்தவை போல தோன்றினாலும், உண்மையில் Viverridae என்னும் விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. சிறிய-நடுத்தர அளவிலான விலங்குகள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா காடுகளில் அதிகம் காணப்படும் இந்த விலங்குகளின் சுரப்பிகள் அதிகம் மணக்கக்கூடியவை. காபி லுவக் (Kopi Luwak) இந்த சிவெட் பூனைகளின் கழிவில் இருந்து பெறப்படும் காபியாகும். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபியாகவும் கூறப்படுகிறது.

வியட்நாமில் சிவெட் பூனைகள் மதிப்புமிக்க சொத்துக்களாகக் கருதப்படுகிறது. அதனால், அங்கு ஒரு பெண் சிவெட் பூனை சுமார் $700 டாலர் மதிப்புக்கு விற்கப்படும். கருத்தரித்திருக்கும் ஒரு சிவெட் பூனை $1,000-க்கு மேல் விற்கப்படுகிறது. இந்தப் பூனைகள் பழுத்த காபி செர்ரிகளை உட்கொள்கின்றன. அதற்குப் பிறகு அவை வெளியேற்றும் மலத்திலிருந்து பீன்ஸ் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, பிரீமியம் காபியாக வறுக்கப்பட்டு விற்கப்படுகிறது.

Civet Cat
Civet Cat

காபி உற்பத்திக்கு அடுத்து, சீனா மற்றும் வியட்நாமில் சிவெட் இறைச்சி ஒரு ஆடம்பர உணவாகக் கருதப்படுகிறது. மேலும் பாரம்பரிய சீன மருத்துவத்துக்கும் இது பயன்படுத்தப்படுகிறதாம்.

9 மாதங்களில் 3 முறை லாட்டரி வென்ற 'ரியல் லக்கி பாஸ்கர்' - ரூ.21 கோடியை என்ன செய்யப் போகிறார்?

லாட்டரி சட்டப்பூர்வமாக உள்ள இடங்களில் வழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மிகப் பெரிய தொகையைப் பரிசாகத் தரும் லாட்டரிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலே... மேலும் பார்க்க

Trump: தடுக்கி விழுந்த ட்ரம்ப்: வைரலாகும் வீடியோ; ஜோ பைடனுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் மக்கள்!

2023-ம் ஆண்டு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அப்போதைய அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.... மேலும் பார்க்க

Google: ``அடுத்துவரும் கூகுளின் தலைவர்..." - வைரலாகும் சுந்தர் பிச்சையின் பேச்சு!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சமீபத்தில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. அதில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்தின் அட... மேலும் பார்க்க

Momos: "சைவ உணவுதான் வேண்டுமென்றால் சைவ உணவகத்தில் ஆர்டர் செய்யலாமே?" - நுகர்வோர் நீதிமன்றம் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாதரைச் சேர்ந்த தம்பதியினர் 'வாவ் மோமோஸ்' கடையிலிருந்து 'ஸ்டீம் டார்ஜிலிங் மோமோ காம்போ'வை ஆர்டர் செய்திருக்கின்றனர். சைவ சிற்றுண்டியை ஆர்டர் செய்த அவர்களுக்கு சிக்கன் மோமோஸ் ஆர... மேலும் பார்க்க

`அப்பா, நான் பிரபலமாக போகிறேன்' - 19 வயது இளம் பெண்ணின் உயிரைப் பறித்த Dusting Challenge Trend

அமெரிக்காவின் அரிஜோனா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரென்னா ஓ ரூர்க் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக அவர் செய்த டஸ்டிங் சவால் (d... மேலும் பார்க்க

`500 ரூபாய்' - குழப்பத்தை ஏற்படுத்திய யூடியூப் வீடியோ; ``தவறான தகவலை பகிர வேண்டாம்'' - RBI

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்கெனவே இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டது.பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால் புதிதாக 200,... மேலும் பார்க்க