செய்திகள் :

1300 நாள்கள்! சாதனைப் படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா!

post image

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

காரணம், இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது.

இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கும் முன் சென்னை பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீடான இப்படம் இதுவரை 1300 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்துள்ளது. இதுவே, மறுவெளியீட்டில் இவ்வளவு நாள்களைக் கடந்த முதல் இந்திய சினிமா ஆகும்.

முக்கியமாக, மறுவெளியீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு நாளுக்கு ஒருகாட்சி என்கிற அளவில் தொடர்ந்து திரையிடப்பட்டதுடன் அதற்கு காதலர்களிடம் இன்றுவரை வரவேற்பும் கிடைத்திருப்பதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: யார் இந்த ரச்சிதா ராம்?

vinnaithaandi varuvaaya movie completes 1300 days in rerelease

டுரண்ட் கோப்பை: அரையிறுதியில் ஷில்லாங் லஜோங்

இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு ஷில்லாங் லஜோங் எஃப்சி அணி தகுதி பெற்றது. நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான டுரண்ட் கோப்பையின் 134ஆவது ஆண்டு போட்டி பல்வேறு... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல் விளாசல்: தெ.ஆ.வை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி நிறைவடைந்தது.ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தெ.ஆ. அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் தோற்று ஒன்றில் வெற்றியை... மேலும் பார்க்க

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

கூலி திரைப்படத்தில் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என ஆமீர் கான் தெரிவித்துள்ளார். லோகேஷ் - ரஜினி கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் கதை, திரைக்கதையால் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளத... மேலும் பார்க்க

ஏகே - 64 எப்படிப்பட்ட கதை? ஆதிக் விளக்கம்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பட... மேலும் பார்க்க