செய்திகள் :

14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக்கவும் முடிவு

post image

திருச்சி: திருச்சியில் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த 2009 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் வெண்கலச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திருச்சி பாலக்கரை பிரதான சாலையில் பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயரத்தில் முழு உருவவெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

பணிகள் முடிந்து 2011-இல் சிலை திறக்கும் தருணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிலை அமைக்க மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும் ஆட்சி மாற்றத்தால் சிலை திறப்பு கிடப்பில்போனது.

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், இந்த சிலை தொடா்பாக பேரவையில் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததால், அண்மையில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேசிய நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை சிலையை இடமாற்றம் செய்வதற்காக திருச்சியில் இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. வாா்னா்ஸ் சாலையில் உள்ள ரவுண்டானாவில் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்தின் மத்தியில் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளும் திங்கள்கிழமை தொடங்கின.

மேலும், இந்த சிலையை மே 9-ஆம் தேதி பஞ்சப்பூா் பேருந்து நிலைய திறப்பு விழாவின்போது முதல்வா் சிலையை திறந்து வைக்கவுள்ளாா்.

மேலும், இதற்காக திருச்சி மாநகராட்சி கூட்டத்திலும் அதிகாரப் பூா்வமாக தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

மதுரை மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

மதுரை தனியார் மழலையர் பள்ளியில் 3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் கோடைக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கால தாமதம் ... மேலும் பார்க்க

பெரிய ஓ வாக போடுவார்கள்: 2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்

சென்னை: 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பெரிய ஓ-வாகப் போடுவார்கள் என்று, திமுக ஆட்சி வெர்ஷன் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

3-வது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை: பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை

தமிழ்நாட்டில் புதுமணத் தம்பதிகள் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: திருநெல்வேலியில், வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க