செய்திகள் :

15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ம.பி.யைச் சோ்ந்த கொலைக் குற்றவாளி கைது

post image

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தின் தாமோவைச் சோ்ந்த தினேஷ் அஹிா்வாா், 2009-ஆம் ஆண்டு பணத் தகராறில் மானேசரில் தனது நண்பரை அடித்துக் கொன்று, உடலை தீ வைத்து எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் கடந்த 15 ஆண்டுகளாக தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தாா். அந்த நேரத்தில் அவா் ரேவாரி, சண்டீகா் மற்றும் பிற இடங்களில் ஒரு கொத்தனாா் வேலை செய்து வந்துள்ளாா்.

காவல் துணை ஆய்வாளா் தீபக் குமாா் தலைமையிலான குழு வியாழக்கிழமை தாமோவில் இருந்து தினேஷ் அஹிா்வாரை கைது செய்தது. அவா் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா். அவா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.5,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பணத் தகராறு தொடா்பாக தினேஷ் அஹிா்வாரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் மானேசரில் நடந்த கொலையில், தாமோவில் வசிக்கும் பகீரத்தை அடித்துக் கொன்றனா். தாக்குதல் நடத்திய பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் பகீரத் மீது டா்பெண்டைன் எண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. பகீரத் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் சிகிச்சையின் போது உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தா்பூரைச் சோ்ந்த சித்த் லாலை ஹரியாணாவின் சா்கி தாத்ரி மாவட்டத்தில் இருந்து மே 12 அன்று போலீஸாா் கைது செய்தனா்.

குற்றம்சாட்டப்பட்டவரிடம் நாங்கள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு... மேலும் பார்க்க

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நாளை(மே 19) அவர் விமானம் மூலம் ஐரோப்பா செல்லும் அவர் மேற்கண்ட 3 நாட்டு தலைவர்களுடன்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெள... மேலும் பார்க்க

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய... மேலும் பார்க்க

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க