செய்திகள் :

1500 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 4 பேர் பலி!

post image

உத்தரகண்ட்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் விழுந்து 4 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் இருந்து, பயணிகள் பேருந்து புதன்கிழமை (டிச. 25) மதியவேளையில் நைனிதல் மாவட்டம் ஹல்ட்வானி பகுதிக்கு இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 27 பேர் பயணித்தனர். இந்த நிலையில் பீம்தால் - ராணிபாக் சாலை வழியாக மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 1500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தினையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அப்பகுதி மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் குழந்தை, பெண் உள்பட 4 பேர் பலியாகினர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, நிவாரணமும் அறிவித்தார். பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் கூறினார்.

எய்ம்ஸ் விரைந்த காங். தலைவர்கள்! மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்ம மரணம்!

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் மகேந்திர பிரஜாபத் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கை... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

2024: லாபம் அளித்த முதல் 7 நிறுவனப் பங்குகள்!

2024 ஆம் ஆண்டின் இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் அமைந்தது. குறிப்பாக, நவம்பர் முதல் டிசம்பர் வரையில் பெரும்பாலும் சரிவையே கொண்டிருந்தது. இருப்பினும், சில நிறுவனங்கள் மட்டும் முதலீட்டாளர்களுக... மேலும் பார்க்க

8 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து கொலை!

வாரணாசியில் சிறுமியை பாலியல் சீண்டலில், கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் ஒரு பள்ளியருகே 8 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாணமாக, இறந்த நிலையில் சாக்குப்பையில் இருப்ப... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவர் கொலை!

மகாராஷ்டிரத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவியைக் கண்டித்த கணவரை மனைவி கொலை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.புணேவில் பாஜக எம்.எல்.சி.யான யோகேஷ் திலேக் என்பவரின் மாமா சதீஷ் வாக் (51), டிச... மேலும் பார்க்க