155 அடி நீள மேஜையில் ருசிகர உணவுகள்: பிரட்டனில் டிரம்புக்கு அளித்த விருந்து!
பிரிட்டன் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இணைந்து மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
வாட்டர்கிராஸ் பன்னா கோட்டா, கோழிக்கறி பல்லோடைன் என பெயரே வாயில் நுழையாத, பாமர மக்களால் இப்படி ஒரு உணவு இருக்கிறது என்று அறிந்திருக்கவும், வாழ்நாளில் பார்த்திடவும் முடியாத பல உணவுகள் இந்த விருந்தில் இடம்பெற்றிருந்தது.
செயின்ட் ஜார்ஜ்-ன் வின்ட்சர் காஸ்டில் மாளிகையில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரண்மனை என்றும் கூறப்படுகிறது.
இந்த உலகிலேயே மன்னர் வாழும் மிகப்பெரிய அரண்மனை என்று எப்போதும் வின்ட்சர் காஸ்டில் மாளிகையை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த அரண்மனை முதலாம் வில்லியம் காலத்தில் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.