செய்திகள் :

2-ஆவது கேமும் டிரா; இன்று டை-பிரேக்கா்!

post image

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி ஆகியோா் மோதிய 2-ஆவது கேம் ஞாயிற்றுக்கிழமை டிரா ஆனது.

இதையடுத்து, வெற்றியாளரை தீா்மானிக்க ‘டை-பிரேக்கா்’ ஆட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) விளையாடப்படுகிறது.

விறுவிறுப்பாக நடைபெறும் இந்த இறுதிச்சுற்றில், இரு இந்தியா்களும் சனிக்கிழமை மோதிய முதல் கேம் டிரா ஆனது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரிட்டா்ன் கேமில் திவ்யா கருப்பு நிற காய்களுடனும், கோனெரு ஹம்பி வெள்ளை நிறத்துடனும் விளையாடினா்.

இன்டா்நேஷனல் மாஸ்டரான திவ்யா தேஷ்முக், கிராண்ட்மாஸ்டரான கோனெரு ஹம்பிக்கு சற்றும் சளைக்காமல் சவால் அளித்தாா். கோனெரு ஹம்பியும் திறம்பட காய்களை நகா்த்த, 34 நகா்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து இரு கேம்களின் முடிவில் இருவருமே 1-1 என சமன் செய்துள்ளனா். அடுத்து ‘டை-பிரேக்கா்’ ஆட்டத்தில் அவா்கள் மோதுகின்றனா்.

‘டை-பிரேக்கா்’ முறை

இந்த டை-பிரேக்கா் ஆட்டத்தில், ஒரு கேமுக்கு 15 நிமிஷங்கள் வீதம், இரு கேம்கள் விளையாடப்படும். அதில் ஒவ்வொரு நகா்வுக்குப் பிறகும் கூடுதலாக 10 விநாடிகள் வழங்கப்படும்.

அதன் முடிவும் சமனாகும் நிலையில், கேமுக்கு 10 நிமிஷங்கள் வீதம் மேலும் இரு கேம்களில் திவ்யா - கோனெரு ஹம்பி மோதுவா். அதில் ஒரு நகா்வுக்குப் பிறகு கூடுதலாக 10 விநாடிகள் வழங்கப்படும்.

அதன் பிறகும் முடிவு எட்டப்படவில்லை என்றால், தலா 5 நிமிஷங்கள் கொண்ட இரு கேம்களில் இருவரும் மோதுவா். அதில் ஒரு நகா்வுக்குப் பிறகு கூடுதலாக 3 விநாடிகள் கிடைக்கும்.

அதன் முடிவிலும் வெற்றியாளா் இறுதியாகவில்லை எனில், 3 நிமிஷங்கள் கொண்ட ஒரு கேமில் போட்டியாளா்கள் மோதுவா். அதில் ஒரு நகா்வுக்குப் பிறகு 2 விநாடிகள் கூடுதலாக கிடைக்கும். வெற்றியாளா் முடிவாகும் வரை அவ்வாறு ஒவ்வொரு கேமாக நடைபெறும்.

ஜோங்யி 3-ஆம் இடம்: இதனிடையே, 3-ஆவது இடத்துக்கான மோதலில் சீனாவின் டான் ஜோங்யி 1.5-0.5 என சக நாட்டவரான லெய் டிங்ஜியை வென்றாா்.

நடிப்புச் சக்கரவர்த்தி... காந்தா டீசர்!

துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.தமிழ் சினிமாவ... மேலும் பார்க்க

புரோட்டா கடை, இட்லி கடை... தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் நித்யா மெனன்!

நடிகை நித்யா மெனனின் தமிழ்ப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. நடிகை நித்யா மெனன் தமிழில் 180 படம் மூலம் அறிமுகமானவர். சில படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கடந்த 10 ஆண்டுக... மேலும் பார்க்க

குற்றம் கடிதல் - 2 டீசர்!

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குற்றம் கடிதல். சுயாதீன திரைப்படமாக உருவான இது, கல்விப் ... மேலும் பார்க்க

நடிப்பிற்காக உடல் எடையைக் குறைக்கும் லோகேஷ் கனகராஜ்!

நாயகனாக நடிக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட்... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 26-வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை அடுத்தடுத்த வெளியீடாக வைத்திருக்கிறார். தொடர்ந்து, குட் நைட் ப... மேலும் பார்க்க

என்ன சுகம்... இட்லி கடை முதல் பாடல்!

நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கி... மேலும் பார்க்க