2 நாள்கள் மட்டுமே... சென்னைக்கு கடைசிசுற்று மழை எப்போது?
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் டிச. 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
காற்றழுத்த தாழ்வால் சென்னைக்கான கடைசி மழையும் நிறைவடைந்துவிட்டது. பூண்டி ஏரி மீண்டும் நிரம்பியுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 95% நிரம்பியுள்ளன. தொடர்ந்து, பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை.
இதையும் படிக்க: அண்ணா பல்கலை. மாணவி வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!
காற்றழுத்த தாழ்வு நிலை கடந்து சென்றும் மீண்டும் வந்தும் 10 நாள்களாக நீடித்தது. இதன் காரணமாக கடந்த 2 நாள்களாக சென்னையில் நல்ல மழை பெய்தது. திருத்தணியில் 82 மி.மீ. மழையும் நகரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 70 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறிய அளவிலான மழைமேகங்களால் டிச. 30, 31 ஆகிய தேதிகளில் மழை பெய்யும். தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் ஆண்டின் இறுதி மற்றும் ஜனவரி மாதத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று(டிச. 27) கடைசியாக தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, டெல்டா பகுதிகள், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் கோவையில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.