செய்திகள் :

2 படங்களின் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் கார்த்தி!

post image

நடிகர் கார்த்தி இரண்டு திரைப்படங்களை முழுமையாக முடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் முக்கியமாக, நலன் குமாரசாமி இயக்கிய வா வாத்தியார் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாகியும் திரைக்கு வராமல் இருக்கிறது.

அதேநேரம், தற்போது சர்தார் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து, கார்த்தி டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்திலும் அதன்பின் லோகேஷ் கனகராஜின் கைதி - 2 படத்திலும் நடிப்பார்.

மேலும், பிரபல தெலுங்கு திரைப்படத் தொடரான ஹிட் படத்தின் நான்காம் பாகத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தை சைலேஜ் கொலனு இயக்குகிறார்.

இப்படி, தொடர்ந்து வரிசையாகத் தன் படங்களின் வருகைக்காகக் காத்திருந்தாலும் இப்போது வா வாத்தியர், சர்தார் - 2 படங்களை எதிர்நோக்கியிருக்கிறார் கார்த்தி!

இதையும் படிக்க: கமல் ஹாசன் தயாரிப்பில் படம் இயக்கும் சு. அருண் குமார்?

ஷைன் டாம் சாக்கோவை பலமுறை கண்டித்திருக்கிறேன்: ஆசிஃப் அலி

நடிகர் ஷைன் டாம் சாக்கோ குறித்து ஆசிஃப் அலி பேசியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ.கம்மட்டிபாடம், இஷ்க், குருப்உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தமிழில் விஜய் நடிப்... மேலும் பார்க்க

நாடு முழுக்க புரமோஷன் செய்தும் தக் லைஃப் வசூல் இவ்வளவுதானா?

நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் வியாழக்கிழ... மேலும் பார்க்க

தனக்குத் தானே முரண்படும் ரொனால்டோ..! தங்கப் பந்து விருதுக்கான கருத்தால் சர்ச்சை!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தங்கப் பந்து விருது கருத்துக்கு பிரெஞ்சு கால்பந்து வீரர் ரிபெரி கிண்டலாக எதிர்வினை ஆற்றியது பேசுபொருளாகியுள்ளது. கால்பந்து உலகில் தங்கப் பந்து விருது (பேலந்தோர்) மிகவும் முக்... மேலும் பார்க்க

மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடுவேன்: ரொனால்டோ

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வருமெனக் கூறியுள்ளார். கால்பந்து உலகில் தற்போது ரொனால்டோ, மெஸ்ஸிக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்க... மேலும் பார்க்க

பக்திப் பாடலை வெளியிட்ட இளையராஜா பேரன்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரன் பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் மகனான யத்தீஸ்வர் ராஜாவும் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவி... மேலும் பார்க்க