செய்திகள் :

2 வயது பெண் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்மாமா... கேரளாவை அதிர வைத்த சம்பவம்!

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவருக்கு ஸ்ரீது என்ற மனைவியும், தேவேந்து என்ற 2 வயது மகளும், 8 மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன் தினம் இரவு தந்தை ஸ்ரீஜித்துடன் தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தையை நேற்று அதிகாலை 5 மணி அளவில் காணவில்லை என பாலராமபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தார்.

போலீஸாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தேவேந்துவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களின் வீட்டு அறையில் கிடந்த கட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மற்றொரு இடத்தில் மூன்று கயிறுகளை தூக்குப்போடும் வகையில் சுருக்கு போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றை ஆய்வு செய்தனர்.

மருமகளை கிணற்றில் வீசி கொலைசெய்த ஹரிகுமார்

கிணற்றை மூடப்பட்டிருந்த வலை ஒருபக்கத்தில் விலகி இருந்தது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கிணற்றி இறங்கி தேடியபோது அங்கு குழந்தை தேவேந்துவின் சடலம் மீட்கப்பட்டது. குழந்தை தானாகச் சென்று கிணற்றில் குதிக்க வாய்ப்பு இல்லை என்பதாலும், வீட்டில் உள்ளவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அந்த வீட்டில் தேவேந்துவின் பெற்றோர், ஸ்ரீதுவின் சகோதரனும் குழந்தையின் தாய்மாமாவுமான ஹரிகுமார் மற்றும் ஸ்ரீதுவின் தாய் ஸ்ரீகலா ஆகியோரும் இருந்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தையின் தந்தை அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. எனவே, அவருக்கும் குழந்தையின் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர் போலீஸார். குழந்தையின் பாட்டியான ஸ்ரீகலாவிடம் விசாரித்ததில் அவருக்கு இந்த விஷயத்தில் பங்கில்லை என போலீஸார் விடுவித்தனர்.

இறுதியாக குழந்தையின் தாய் ஸ்ரீது, அவரது சகோதரன் ஹரிகுமார் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் தனித்தனி அறையில் வைத்து ஒரே மாதிரியான கேள்விகளை இருவரிடமும் கேட்டு விசாரணை நடத்தியது போலீஸ். அதில் சகோதரி மீதான கோபத்தில் குழந்தையை கொலை செய்ததாக ஹரிகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஹரிகுமார் கைது செய்யப்பட்டார்.

கிணற்றில்வீசி கொலைச் செய்யப்பட்ட 2 வயது குழந்தை தேவேந்து

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே விசாரானையை திருப்பும் விதமாக ஹரிகுமார் செயல்பட்டார். வெளியிலிருந்து யாரோ வந்து வீட்டு கட்டிலில் தீ வைத்து விட்டு குழந்தையை தூக்கிச் சென்றதாக விசாரணையை திசை திருப்ப முயன்றார். குழந்தையை காணாததால் தற்கொலையில் ஈடுபட உள்ளதாக காட்டுவதற்கு 3 கயிறுகளை கட்டி வைத்திருந்தார்.

ஹரிகுமார் மற்றும் ஸ்ரீது-வின் மொபைல்களை பரிசோதித்தபோதுதான் அவர்கள் குடும்பத்தில் சில பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது. ஸ்ரீது-வுக்கும்.அவரது கணவர் ஸ்ரீஜித்துக்கும் இடையே மனகசப்பு இருந்து வந்துள்ளது. இதனால் ஸ்ரீஜித் அவ்வப்போதுதான் ஸ்ரீது-வின் வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களுக்கு வருமானம் சொல்லும்படியாக இல்லாத நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் சகோதரியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹரிகுமார் 2 வயது குழந்தைதை கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது" என்றனர்.

சேலம்: உருட்டு கட்டையால் காரை அடித்து நொறுக்கும் அதிமுக பிரமுகர்... வைரலான வீடியோ.. என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முக மூர்த்தி. இவர் தன்னுடைய நிலத்தை அடமானமாக வைத்து கந்துவட்டிக்கு கோவையை சேர்ந்த சுஜய் எனும் ஃபைனான்சியரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : `ஆட்டோ கேங்’ 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார்.அந்தப் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நாக்பூரைச் ச... மேலும் பார்க்க

கோவை: மது போதையில் இளைஞர் கொலை; கை, கால்களைக் கட்டி தண்ணீரில் வீசிய கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற... மேலும் பார்க்க

5 மாதங்களாக பூட்டிய வீட்டில் கிடந்த தந்தை, மகள் சடலங்கள்; விசாரணையில் சிக்கிய டாக்டர்- என்ன நடந்தது?

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 4-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருமுல்லைவாயல்... மேலும் பார்க்க

`டிகிரி சர்டிஃபிகேட் ரூ.10,000…’ - கட்டுக்கட்டாக போலிச் சான்றிதழ்கள்... அண்ணாமலை பல்கலை., சர்ச்சை!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்வாகச் சீர்கேடுகளாலும், முறைகேடுகளாலும் முடங்கும் நிலைக்குச் சென்றது. அதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கொண்டு, அந்த... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற ரூ.1.60 கோடி ஹவாலா பணம்! – விழுப்புரத்தில் மடக்கிய போலீஸார்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் புறக்காவல் நிலையக் காவலர்கள், இன்று வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய பேக் ஒன்றுடன் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்த ... மேலும் பார்க்க