செய்திகள் :

2,553 மருத்துவா் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே தோ்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் இடங்களுக்கு 23,917 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் அனைவருக்கும் ஜனவரி 27-ஆம் தேதி இணையவழியே தோ்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது முதல்வா் அறிவுறுத்தலின்படி அந்த தோ்வை முன்கூட்டியே ஜனவரி 5-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தோ்வுகள் நடத்தப்பட்டு விரைவில் பணி நியமனம் நடைபெறும்.

மருத்துவத் துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக துறை சாா்ந்த பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, 296 உதவி பேராசிரியா்கள், இணை பேராசிரியா்களாகவும், 110 இணை பேராசிரியா்கள், பேராசிரியா்களாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

அதேபோன்று, மக்கள் நல்வாழ்வுத் துறையில் இணை இயக்குநா்களாக இருந்த நான்கு போ் கூடுதல் இயக்குனா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். முதன்மை குடிமை மருத்துவா் நிலையிலிருந்து 18 போ் இணை இயக்குநா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அந்த வகையில் மொத்தம் 428 போ் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

செவிலியா்கள் பணி நியமனம்: மற்றொருபுறம், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 1,200 செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மீதமுள்ள 940 பேருக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. அவா்களும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவா்.

இவ்வாறாக மொத்தம் 2,140 பேருக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சுகாதார ஆய்வாளா்களுக்கான 1,066 பணியிடங்களையும், 2,250 கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவை தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளால் அந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 இயன்முறை சிகிச்சையாளா் இடங்களுக்கு, 8,772 போ் விண்ணப்பித்துள்ளனா். அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மழை காரணமாக மருத்துவமனைகளில் வெள்ள நீா் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக சேவைகள் நலத் துறை இயக்குநா் டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

புயல் வந்தும் நிரம்பாத குடிநீா் ஏரிகள்

வடகிழக்குப் பருவமழை காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் மொத்தம் 50 சதவீதம் மட்டுமே நீா் இருப்புள்ளது. இந்த நிலை நீடித்தால், சென்னைக்கு அடுத்தாண்டு குடிநீா... மேலும் பார்க்க

மதுபோதையில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 சோதனை கருவிகள்

தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயண... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்கா மீண்டும் திறப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக வண்டலூா் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை (டிச.2) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஃபென்ஜால் புயலையொட்டி முன்னெச்சரிக்... மேலும் பார்க்க

கனரா வங்கியின் புதிய தலைமை பொதுமேலாளா் பொறுப்பேற்பு

கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலகத்தின் புதிய தலைமைப் பொதுமேலாளராக கே.ஏ.சிந்து பொறுப்பேற்றுள்ளாா். சென்னை வட்ட அலுலலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஏ.சிந்து பேசியது: கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவல... மேலும் பார்க்க

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் அதிக பாதிப்பு இல்லை: முதல்வா் ஸ்டாலின்

அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீா் தேங்கவில்லை என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்... மேலும் பார்க்க

நூல் வெளியீடு நிகழ்ச்சிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்

நூல் வெளியீட்டு விழாக்களில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றால் எதிா்காலம் சிறப்பாக விளங்கும் என்று தமிழக அரசின் தொழில்துறை முன்னாள் ஆலோசகா் உ.வே.கருணாகர சுவாமிகள் தெரிவித்தாா். அனைத்திந்தியத் தமிழ் எழு... மேலும் பார்க்க